14 November 2008

தடுப்பூசி பெரிய சவால்


தட்டம்மை தொடர்பான இந்த ஊடகச்செய்தி கவலை அளிக்கிறது.
போலியோவும்,பெரியம்மையும்,தமிழ்நாட்டில் இல்லாமல் செய்த பொது சுகாதாரத் துறைக்கு இது பெரிய சவால்தான்.இதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பபூசி போட தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலயதிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.ந‌டைமுறையில் இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் இருக்கும் வசதி இதில் இல்லை.பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக இருக்கும் பெண்கள் தடுப்பூசி போடும் நாட்களிள் பேருந்து பிடித்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளதோடு ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடுகிறது.அறிவுசால் நமது துறை அறிஞர்கள் இது தொடர்பாக ஆரோக்யமான விவாத பங்களிப்பை தரவேண்டிய அவசியம் உள்ளது.
மரு.புருனோ,பழனி சுரேஷ் போன்றோர் இதனை முன்னெடுக்கலாம்.

14 comments:

SUREஷ் said...

சவாலை நாம் சுலபமாக வெற்றி கொள்ள முடியும்
1.அ.ஆ.சு.நி.யில் வைத்து தடுப்பூசி போடுவது எவ்வளவு பாதுகாப்பானது என்பது பல உத்தரவு மற்றும் போதனைகள் மூலம் மக்களுக்கு தெரியும்.
2.எந்த தாயாரும் தடுப்பூசி போட்ட குழந்தையை விட்டு விட்டு எந்தகாலத்திலும் வேலைக்கு போனதில்லை. ஒரு நாள் கூலி தியாகம் செய்வது நேற்றும் இருந்ததுதான்.
3.மாததில் 4அல்லது 5 புதன் தான். அந்த 4 இடத்தில் தான் தடுப்பூசி போடப்படும். அந்த துணை சுகாதார நிலையத்தில் உள்ள மற்ற கிராம மக்கள் ஏதாவது வாகனத்தில்தான் வர வேண்டும். அந்த கிராமத்திற்கு வருவதை விட பெரும்பாலும் ஆ சு நி இருக்கும் கிராமத்திற்கு பஸ் வசதி ஓரளவு அதிகமாகவே இருக்கும்.
4.துணைகிராமம் இல்லாத ஊராய் இருந்தால் அது பஸ் வசதி உள்ள ஊராகவே இருக்கும்.
5.உறுதியாக செவ்வாய், புதன் கிழமைகளில் ஆசுநிகளில் பொடுவதால்,ஒரு செவிலியர் விடுப்பில் சென்றாலும் மற்றவர்கள் கண்டிப்பாக ஊசி போட்டு விடுவார்கள்.
நீங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் போட்டுவிட முடியும். பழைய முறையில் தவிர்க்க முடியாத சூழலில் விடுப்பு எடுத்தால் ஒரு மாதம் கூட தள்ளீப் போகும் சூழல் இருந்தது தவிர்க்கப் படுகிறது.
6.நிறய குழந்தைகளை தாயார் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் மேலும் அக்கரை செலுத்த முடியும். பழைய முறையில் அந்த சுற்றுக் கிராமக் குழந்தைகளை மட்டுமே பார்த்திருப்பார்.
7.அனைத்துக்கும் மேலாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு 20 ஆண்டுகளுக்கு முன்பைவிட இன்று அதிகம். மக்களே தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த எதிர்ப்பிற்கிடையே நமது மூத்தோர் சாதித்ததை இத்தனை இன்றைய பல வசதிகளோடு தொடர முடியாதா? என்ன.........

யோசியுங்கள்

SUREஷ் said...

ஒரே ஒரு விசயம்........

உங்கள் பகுதிக்குச் செல்லுங்கள்....

இந்த தேதி இந்த நேரம் உங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரச் சொல்லுங்கள்.....

டார்கெட் தானே அச்சீவ் ஆகிவிடும். எங்கள் பகுதிகளீல் கிராம சுகாதார செவிலியர் சொல்லுவதுதான் மக்களுக்கு வேதவாக்கு.

சே.வேங்கடசுப்ரமணியன். said...

நன்றி சுரேஷ் சார்..
1.ஒரு தனியார் மருத்துவமணையில் சிசேரியன் ஆப்ரேஷனை ஒரு சிறுவனை செய்ய வைத்தார்கள் என்பதால் தனியார் மருதுவமணைகளில் இனி சிசேரியன் செய்யக்கூடாது என
உத்தரவு போடப்ப்டவில்லை.
2.ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது தாய் மரணம் அடைந்தால் உடனே இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்கக்கூடாது ஜி.ஹ்ச். ல் தான் பார்க்கவேண்டும் என உத்தரவு போடப்ப்டவில்லை.
இது போல எந்த ஒரு தவறு மற்றும் ஒழுங்கீனத்திற்கும் விசாரணையும் தண்டனையும் தான் தீர்வாக இருந்துள்ளது.
ஆனால் ஒரு சில இடங்க‌ளிள் கிராம சுகாதார செவிலியர்களால் தடுப்பூசி போடப்பட்ட சில குழந்தைகள் இறக்க நேரிட்டதால் இனி துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடக்கூடாது எனவும்,ஆரம்ப சுகாதார நிலையஙளில்தான் போட வேண்டும் எனவும் உத்தரவு இடுவது சரியான முடிவாக இருக்குமா? என்பது தான் என் ஐயம்.
மற்றபடி விட்டுப்போன குழந்தைகளுக்கு மொபைல் டீம் மூலமாக தடுப்பூசி போடுவது எல்லாம் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
//எங்கள் பகுதிகளீல் கிராம சுகாதார செவிலியர் சொல்லுவதுதான் மக்களுக்கு வேதவாக்கு// உண்மை தான்
எல்லா பகுதிகளிலும் அப்படித்தான் அதுவும் "எம் ஆர் எம் பி எஸ்" "ஜெ எஸ் ஒய்" க்கு பிறகு இது உறுதி பட்டுள்ளது.

சே.வேங்கடசுப்ரமணியன். said...

சுரேஷ் சார்.......தட்டம்மை ஊசி போடும் சதவிகிதம் குறைந்துள்ளதாக வந்துள்ள செய்தி பற்றிய உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.தஙளது வலைப்பூவில் டெங்கு பற்றிய பதிவு அருமை.அதனை எனது வலைப்பூவில் எடுத்து பதிவு செய்யவும்,பவர் பாய்ன்ட் க்கு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி தருவீர்களா?

SUREஷ் said...

//எங்கள் பகுதிகளீல் கிராம சுகாதார செவிலியர் சொல்லுவதுதான் மக்களுக்கு வேதவாக்கு// உண்மை தான்
எல்லா பகுதிகளிலும் அப்படித்தான் அதுவும் "எம் ஆர் எம் பி எஸ்" "ஜெ எஸ் ஒய்" க்கு பிறகு இது உறுதி பட்டுள்ளது.

இது உணர்வு ரீதியான மன ரீதியான, ஒரு விஷயும். கி.சு.செவிலியர்களின் உண்மையான சேவைக்கு கிடைத்த பரிசு.இதில் "எம் ஆர் எம் பி எஸ்" "ஜெ எஸ் ஒய்" போட்டு குழப்ப வேண்டாம்.

SUREஷ் said...

G P H C ல் வைத்து போடுவது அனைவருக்கும் ஒரு வரம்.காரணங்களை கூறி விட்டேன்

SUREஷ் said...

மொபைல் டீம் இல்லாமலே கூட டார்கெட் அச்சீவ் செய்ய முடியும். தேவை களப்பணி, மற்றும் சிற்ப்பான மோட்டிவேசன்.

கண்டிப்பாக இந்த செய்தி தவறுதான். நிகழ்ச்சி நடந்த மாதங்களீல் வேண்டுமானால் இது உண்மையாய் இருக்கலாம்.
எங்கள் பகுதிகளில் கடந்த வருடங்களில் அச்சீவ் செய்த டர்கெட்டை தாண்டிவிட்டார்கள்.

SUREஷ் said...

மலேரியா, டெங்கு போன்றவை பற்றி இணையத்தில் நிறய உள்ளன. பவர் பாயிண்ட் கூட உண்டு.

இது நான் தொகுத்தது; மொழிபெயர்த்தது; கட் &பேஸ்ட் செய்தது அவ்வளவுதான், இதற்கு என் அனுமதி தேவையில்லை

SUREஷ் said...

சிரிஞ்ச் மூலம் போலியோ மருந்து என்றெல்லாம் செய்தி போட்டிருக்கிறார்கள்: ஒன்றும் விளங்கவில்லை

சே.வேங்கடசுப்ரமணியன். said...

//கி.சு.செவிலியர்களின் உண்மையான சேவைக்கு கிடைத்த பரிசு.இதில் "எம் ஆர் எம் பி எஸ்" "ஜெ எஸ் ஒய்" போட்டு குழப்ப வேண்டாம்.//
//
முன்பெல்லாம் கர்பிணி பெண்களை நோக்கி கிராம சுகாதார செவிலியர்கள் அனுகியது போக இத் திட்டங்களுக்குப் பின் மனு கொடுக்கும் பொருட்டாவது கர்பிணி தாய்மார்கள் கிராம சுகாதார செவிலியர்களை நோக்கி வருகிறார்கள். என்பதற்காக மட்டுமே இதைப் பதிவு செய்தேன்.

//சிரிஞ்ச் மூலம் போலியோ மருந்து என்றெல்லாம் செய்தி போட்டிருக்கிறார்கள்: ஒன்றும் விளங்கவில்லை//
//எனக்கும்தான்.ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதம் வேதனை அளிக்கிறது.தகவல் அளித்தவரும் முக்கிய பதவியில் உள்ளவர் எனவே நம்பகத்தன்மை உள்ள செய்தி யாகத்தான் இருக்கும்.//

புருனோ Bruno said...

//ஆனால் ஒரு சில இடங்க‌ளிள் கிராம சுகாதார செவிலியர்களால் தடுப்பூசி போடப்பட்ட சில குழந்தைகள் இறக்க நேரிட்டதால் இனி துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடக்கூடாது எனவும்,ஆரம்ப சுகாதார நிலையஙளில்தான் போட வேண்டும் எனவும் உத்தரவு இடுவது சரியான முடிவாக இருக்குமா? என்பது தான் என் ஐயம்.//

அது ஒன்று மட்டும் காரணம் அல்ல.

வரும் காலங்களில் மேலும் பல தடுப்பூசிகளை (மூளைக்காய்ச்சல், கல்லீரல் அழற்சி) encephalitis, hep B, தடுப்பூசி திட்டத்தில் சேர்க்க திட்டம் உள்ளது.

இப்படி இருக்கையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி என்பது தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தேவைப்படும் திட்டம்

புருனோ Bruno said...

சுரேஷ் சாரின் கருத்துகளுடன் உடன்படுகிறேன்

புருனோ Bruno said...

////சிரிஞ்ச் மூலம் போலியோ மருந்து என்றெல்லாம் செய்தி போட்டிருக்கிறார்கள்: ஒன்றும் விளங்கவில்லை//
//எனக்கும்தான்.ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதம் வேதனை அளிக்கிறது.தகவல் அளித்தவரும் முக்கிய பதவியில் உள்ளவர் எனவே நம்பகத்தன்மை உள்ள செய்தி யாகத்தான் இருக்கும்.////

உத்திர பிரதேஷம் போன்ற இடங்களில் OPVக்கு பதிலாக IPV பயன் படுத்த இருக்கிறார்கள்

OPV - Oral Polio Vaccine (Sabine)
IPV - Injectable Polio Vaccine (Salk)

சே.வேங்கடசுப்ரமணியன். said...

இருவரின் கருத்துகளையும் ஏற்கிறேன்.