14 November 2008

பொது சுகாதார‌த் துறை இயக்குனர்

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் திரு.டாக்டர்.இளங்கோ அவர்களை 5 முறை நேரில் நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.(நெருக்கமாக என்பதற்கு அருகில் என்பதை தவிர வேறு அர்த்தம் இல்லை.விவேக் காமெடியில் சொல்வது போல "அவரை எனக்குத்தெரியும் அவருக்கு என்னைத்தெரியாது")
முதலில் சந்தித்தது திண்டுக்கல்லில். கரூர் மாவட்டத்தில் என்னுடன் பணி புரிந்த திரு.ராமனாதன் உதவியாளர் அவர்களின் திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்த போது .அப்போது அவர் திண்டுக்கல் துணை இயக்குனர்.

இரண்டாவது, திருச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்.அப்போதய தலைமை கணக்கு அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் திரு.நாராயணன் அவர்களின் வகுப்பும் இருந்தது.அவருக்கு பவர் பாய்ண்ட் உதவிக்கு இயக்குனரக உதவியாளரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.ராஜனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன்.அப்பொது தான் திரு.ஜி.ஆர்.ரவீந்திரநாத்,நாரண்ம்மா தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வர் திரு.அறம்.,காதுகள் நாவல் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற‌ எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் பேத்தி மரு.ஏ.ஆர்.சாந்தி ,ஆகியோரை பார்த்தேன். தற்காலிக பணியாளர்களாக இருந்த போதே நிவாகம், துறை பணிகள் போன்றவைகளிள் அவர்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு ஆச்சிரியப்பட்டேன்.(இது தொடர்பாக தனி பதிவு எழுதவேண்டும்).சரி விஷயத்திற்கு வருகிறேன்,
அந்த பட்டறைக்கு ஒரு சிலைடு ஷோவுடன் துறை தொடர்பான நீண்ட வகுப்பு எடுத்தார்.அவரது பேச்சை அரங்கில் இருந்த அனைவரும் மிக அமைதியாகவும்,கவனமாகவும் வுள்வாங்கிய அந்நிகழ்வு இன்றும் என் நினைவில் உள்ளது.அவரது பேச்சாற்றலை நான் எதிர் பார்க்கவில்லை.திருநெல்வெலி துவங்கி,சமூகநீதி,மாணவர் சக்தி,என சுவாரசியமான பல விஷயங்கள் இடைஇடையே.இறுதியில் கேள்விநேரம்.சளைக்காத கேள்வி,சளைக்காத பதில்.ஒரு அதிகாரியாக பார்த்தது போய் ஒரு ஆளுமையுள்ள பேச்சாளராக அங்கு பார்த்தேன்.

3 வது சென்னையில் திரு.அரங்கஅனந்த கிருட்டிணன் அவர்களுடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் அனைவரும் அவரது அலுவலகத்தில் அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.எந்த கோரிக்க்கைகளும் இல்லாத ஒரு சாதாரண சந்திப்புதான்.வந்த அனைவருக்கும் இருக்கைகள் தந்து உட்காரச்சொன்னார்.அமைச்சுப்பணியாளர்களை உட்காரவைத்துப் பேசிய அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.கோரிக்கைகள், பணிகள்,இவைகளையெல்லாம் தாண்டி நச் சென்று அவர் சொன்ன ஒரு சங்கதி

1. உங்களது ஒவ்வொரு கூட்டத்திலும் துவங்குமுன் ஒரு மணி நேரம் உஙகளை நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இன்று நாம் வேலைக்கு வந்து எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளோம்,எத்தனை கோப்புகளை எடுத்து பணி செய்துள்ளோம். என்பது மதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.சங்கம், கோரிக்கைகள் அத்ற்கான போராட்டஙள் அனத்தும் தேவைதான்
கூடவே சுயபரிசோதனையும் தேவை.

4 வது சந்திப்பு அவர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றபின்.இயக்குனர் அறையில். சம்பிரதாய சந்திப்பு
5 வது சந்திப்பு தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் அவர்களுடன்.இயக்குனர் அறையில் அவர் எதிரே உயர்நிலை அலுவலர்கள் பலர்.இடயிடயே தம்பி சீனு (பி சி) அவசர செய்திகளை தொடர்பு கொள்ள தொலைபேசியுடன்.மிகுந்த பரபரப்பான சூழல்.அந்த சூழலிலும் கிடைத்த சிறிது நேரத்தில் கோரிக்கை படிவத்தினை கொடுத்தார் தோழர். கோரிக்கை ஒரு சிறு புத்தகம் போல இருந்தது.(அனைத்தும் அரங்க அனந்த கிருட்டிணன் அவர்கள் உழைப்பு) அப்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகள் இவர் சாதிப்பதற்காக வந்துள்ளார் என்பதை உணர்த்தியது.

உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக 3 கட்டம் போட்டு தெரிவியுங்கள்.

1.கோரிக்கை சுறுக்கமாக.
2.எங்கு நிலுவை?
3.என்ன செய்தால் தீர்வுகிட்டும்?

இவைகளுடன் முதலில் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடனான முதல் கட்ட பேச்சு நடத்துங்கள் அடுத்து
அதன் பிறகு அவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.இதற்கிடையில் தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் மற்றும் நிவாகிகள் இயக்குனர் அருகில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.இயக்குனர் சிரித்துக்கொண்டே கண்ணாடியை நாசி நுனிக்கு இறக்கி மேல் பக்கமாக பார்த்து புகைப்படம் எடுத்தவரை பர்ர்த்து கேட்டார்." என் அறையில் என்னை புகைப்படம் எடுக்க என்னிடம் அனுமதி பெறவேண்டாமா?"
தவறை உணர்ந்து உடன் மன்னிப்பு கோரினார் நண்பர்.பேசி முடித்த பிறகு விடைபெற்றோம். அப்போது தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் இயக்குனரிடம் கேட்டார் "எங்கள் மாநில நிர்வாகிகள் உங்களுடன் ஒரு புகைப்பட்ம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா அய்யா?" "ஓ.எஸ்".என்ற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாநில நிர்வாகிகள்

No comments: