உங்களுக்குத் தெரியுமா?இப்படியெல்லாம்இருக்கிறது என்று?
ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நடைபெற்றுள்ள பிரசவங்களின் எண்ணிக்கை இதோ. 2006 -2007=82532
2007-2008 =153989
2008-2009 =259193
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடியுள்ளது.
இதற்கான காரணம் என்ன ?
1.மகப்பேறு சமயத்தில் தாய்/சிசு மரணவிகிதம் அபரிமிதமாக குறைந்துள்ளது.
தாய், குழந்தை கவனிப்பு மக்களுக்கு திருப்தி அளிக்கிறது.
2. 24 மணி நேரமும் மருத்துவர்கள்,செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
3. சிக்கலான பிரசவம் எனில் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமணைக்கு அழத்துச்செல்ல ஆம்புலன்ஸ் எப்போதும் உள்ளது.
4.இரவு நேரங்களில் வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டு விட்டால், ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தனியார் வாகனத்திலும்(டாக்சி)வரலாம்.அதற்கான வாடகையினை கிராமசுகாதார செவிலியரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
5. பிரசவத்திற்கு பெண்ணுடன்வரும் ஆண்/பெண் துணை பிரசவத்தின்போது உடன்இருக்க அனுமதி உண்டு. 6.உடன் வரும் துணையாளருக்கு
தங்கிக்கொள்ளஇடம்,
குளிக்கடவல்,சோப்பு,பேஸ்ட்,பிரஷ்
அடங்கிய கிட்வழங்கப்படும்.
7.கர்பமான 7 வது மாதம் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் மூலம்ரூ.3000/-காசோலைவழக்கப்படும்.
பிரசவம்முடித்து டிஸ்சார்ஜ் ஆகும்போது ரூ.3000/-க்கானகாசோலை யுடன் ஜனனிசுரக்ஷா யோஜனாதிட்டத்தின் மூலம்ரூ.700/-க்கானகாசோலையும்வழங்கப்படும். (முதலாவது முதல்இரண்டு கர்பத்திற்குமட்டும்,இரண்டாவதுமுதல் இரண்டுபிரசவத்திற்குமட்டும்.எனைய விதிகள்பொருந்தும்)
8.பிரசவமான அன்றிலிருந்து இரண்டுநாட்களுக்கு ஆறு வேளைக்கும் உணவு வழங்கப்படும்.
9.குடிக்க , குளிக்க சுடுநீர் வழங்கப்படும்.
10.பிரசவத்திற்கு பின்குடும்ப நல அறுவைசிகிச்சைசெய்துகொள்ளும்தாய்மார்களுக்கு ரூ.600/- ரொக்கமாக வழங்கப்படும்.
3 comments:
அழகாக தொகுக்கப்பட்டுள்ள தகவல்கள்.
நமது பணிகளை பெருமைப்படுத்தும் முயற்சி..தொடரட்டும்.. வாழ்த்துக்கள்
sounds so good...........
Post a Comment