18 August 2009

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

"தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் 01.08.2009 முதல் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிது.இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களை கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.G.O.Ms.No.204, Health and Family Welfare (AB 2)Department, dated 15.07.2009.

துணை சுகாதார நிலையங்கள், அல்லது வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.


இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

மக்கள், நலத்திட்டங்களை பெற அலைந்த காலம் போய், மக்களை தேடி திட்ட உதவிகள் செல்லும் காலம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இறப்பு நிகழ்ந்தால் அதற்கான சான்றிதழும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்கப்படும்.


4 comments:

புருனோ Bruno said...

ஆரம்ப சுகாதார நிலைய சேவைகளின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

Thank u sir

Dr.ராம் said...

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் காலம் இது..

சே.வேங்கடசுப்ரமணியன் said...

டாக்டர் ராம் தங்கள் வருகையும் மறுமொழியும் மகிழ்ச்சிஅளிக்கிறது. பன்றிக்காய்ச்சல் பற்றிய விரிவான பதிவினை உங்கள் பொலொக் ‍ல் வழங்கலாமே