

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊள்ளன. இதில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8.மீதமுள்ள 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் சகல வசதிகளும் இருக்கும். முக்கியமாக இடவசதி.ஆனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் இடவசதி குறைவு.இந்த ஆண்டு ஏப்ரல் 2008 முதல் ஜனவரி 2009 வரையில் அதிகமான பிரசவம் நடைபெற்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் 5 இங்கே நிரல் படமாக. 113 பிரசவங்கள் பார்த்து முதல் இடத்தில் உள்ள தோகமலை வட்டாரத்தைச் சேர்ந்த காவல்காரன்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழ்த்துக்கள்.இச் சாதனயினை அடைய கடுமையாக உழைத்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை துணை செவிலி, ஆகியோர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.இச் சாதனை அடைந்த விதம் பற்றி தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.
2 comments:
வாழ்த்துக்கள். பேருந்து வசதிகூட சரியாக இல்லாத கிராமத்தில் 24x7 காலங்களும் இருந்து பிரசவம் பார்த்த அனைவருக்கும் பாராட்டுகள்.
வாருங்கள் சுரேஷ் சார்.கருத்துக்கு நன்றி.
Post a Comment