23 October 2010

கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் பற்றிய சர்ச்சை

கருத்தரித்தப் பெண்கள் உடல் நலம்மற்றும் அவர்கள் மரணவிகிதம் பற்றியஇந்திய அரசின் உரிமை கோரல்களை ஆசியமகளிர் உரிமை மற்றும் மனித உரிமைகண்காணிப்பு ஆய்வாளர் அருணா காஷ்யப்கடுமையாக மறுத்துள்ளார்.

கருத்தரித்த பெண்களின் மரண விகிதத்தில் ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளைஎட்டுவதில் இந்தியா சரியான பாதையில்தான்சென்று கொண்டிருக்கிறது என்று இந்தியஅரசு தெரிவித்திருந்தது.


இது குறித்து அருணா காஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியஅரசு அபாயகரமாக இந்திய மக்களை திசை திருப்புகிறது." என்றுகூறியுள்ளார்.

(“The Indian government should stop playing number games with women's lives,”)

கருத்தரித்த பெண்கள் மரண விகிதத்தை இந்தியா குறைத்து வந்தாலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு இலக்குகளுக்கு அருகில் அதுஇல்லை என்று உலகச் சுகாதார மையமும், ஐ.நா. அமைப்புகளும் செய்துள்ளமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. புத்தாயிர வளர்ச்சி இலக்குகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவேவெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியா, ஆப்கான், வங்கதேசம்,காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா,பாகிஸ்தான், சூடான், தான்சானியா, ஆகிய நாடுகள் கருத்தரித்த பெண்களின்உலக அளவிலான மரண விகிதத்தில் 65% என்று பங்களிப்பு செய்துவருகிறதுஎன்று தெரிவித்துள்ளது. அதாவது உலக அளவில் கர்ப்பம்தரித்த பெண்கள்அதிக அளவில் இந்த நாடுகளில்தான் மரணம் அடைந்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் இது. ஆனால் இதனை இந்திய அரசுமறுத்தது. ஆனால் ஐ.நா. சுகாதாரப் பிரிவு உடனடியாக இந்திய அரசின்மறுப்பை எதிர்த்து ஐ.நா. இலக்குகளை இந்தியா சந்திக்காது போகும்நிலை உள்ளது என்று தெரிவித்திருந்தது.

அதாவது "இன்ஸ்டிட்யூஷனல் டெலிவரீஸ்" என்று அழைக்கப்படும் ஒருசுகாதார நிலையத்தில், அது மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள்நிரம்பிய இடங்களில் மகப்பேறு நடக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதைவைத்துக் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னேற்றம்கண்டு வருவதாகத் தவறாக கூறிவருகிறது.

இதனாலெல்லாம் கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் இந்தியாவில்குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது என்றாலும் அந்த வசதிகள்இன்மையால் நிகழும் மரணங்கள் பற்றி இந்திய அரசு எதையும்குறிப்பிடுவதில்லை.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் சுமார் 1 கோடிப் பெண்கள் மருத்துவமனைகளில்பாதுகாப்பான பிரசவம் பெற்றனர். என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அல்லதுசுகாதார மையங்களில் மகப்பேறு அடையும்தாய்மார்களில் எத்தனை பேர் அதன் பிறகுஅல்லது அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச்சென்ற பிறகு உயிரிழந்துள்ளனர் என்பதைஇந்திய அரசு கண்டு கொள்வதில்லை,இதுதான் இந்தத் திட்டம்வெற்றிபெற்றதற்கான அளவு கோல் என்றுமனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.

சுகாதார வசதிகள் இன்மை, மோசமானபோக்குவரத்து வசதிகள், அவசரகாலமகப்பேறு வசதிகள், மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் கவனிப்புகள்ஆகியவற்றில் போதாமை காரணமாக இந்தியாவில் இன்னும் மரண விகிதம்அதிகமாகவே உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் தங்களது இந்தஅறிக்கைக்கு உதாரணமாக கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் எந்தவசதியுமின்றி நடைபாதையில் குழந்தை பெற்ற தாய் ஒருவர் படுமோசமான சூழ்நிலையில், அசுத்தமான மழைநீர் நிரம்பிய இடத்துக்கு அருகில்பிரசவம் முடிந்து 4 நாட்கள் அவதியுற்று கவனிப்பாரற்று பிறகு இறந்துபோனதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தின் படி பிரசவ விடுதிகளில் பிரசவம்செய்து கொண்ட தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.ஆனால் வீட்டில் பிரசவம் பார்த்தவர்களைக் கூட பிரசவ மருத்துவமனையில்பிரசவம் பார்த்துக் கொண்டதாக சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தி வரும்பணத்தில் சரிபாதி பங்கு பெறுவதும் இந்த நாட்டில் நடந்து வருகிறதுஎன்று மனித உரிமை அமைப்பிடம் பெண்கள் சிலர் புகார் கூறியதையும்இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், பிரசவ ஆஸ்பத்திரிக்குச்செல்லும் முன்னரே பல கருத்தரித்த பெண்கள் இறந்து விடுவதும் தினசரிநிகழ்வாக இருந்து வருகிறது.

இவையெல்லாம் இந்திய அரசு வெளியிடும் உரிமை கோரல் அறிக்கைகளில்காணப்படுவதில்லை. மேலும் அவசரகால போக்குவரத்து வசதிகள் மேம்பாடுஅடைந்ததாகவும் தெரியவில்லை.

மனித உரிமை கண்காணிப்பினர் வருகை தந்த பெரும்பாலானமருத்துவமனைகளில் சாதாரண பிரசவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ந்து கருத்தரித்த பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்ந்துஅவர்களை வேறு வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறுகூறப்படுகிறது. கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்குஅவர்கள் செல்லும்போது காலதாமதமாகி விடுகிறது. மேலும் நல்லசிகிச்சையும், கவனிப்பும் பெற ஏழைத் தாய்மார்களும் ஒரு சிலரை 'கவனிக்க'வேண்டிய நிலையும் உள்ளது என்று அந்த மனித உரிமை அமைப்பின்அறிக்கை இந்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

2 comments:

புருனோ Bruno said...

தமிழகம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது

சே.வேங்கடசுப்ரமணியன் said...

இந்தியாவின் சில மாநிலங்களின் நிலைமை மிகவும் பின் தங்கியுள்ளது என்பதும் உண்மதான் இல்லையா டாக்டர்.