07 November 2011

பச்சை மையினால் யார் எழுதலாம்? யார் கையொப்பம் இடலாம்?

அரசு அலுவலகங்களில் பச்சை மை பயன்படுத்துவது தொடர்பான அரசு ஆணை,பச்சை மைகொண்டு யார் எழுதலாம் யார் கையொப்பம் இடலாம் என இதில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

இதன்படி

 அரசு அலுவலகங்களில் நிலைத்த நீலம், கருப்பு,சிவப்பு ஆகிய மை யினால் மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத,கையெழுத்திட வேண்டும் ,

மற்ற நிற மையினால் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

. சான்றொப்பம் (Attestation)  இட அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டும் (A Grade and B Grade)( கிரெடு பே 4400 லிருந்து  பெறுபவர்கள்) சான்றொப்பம் இட மட்டும் பச்சை வண்ண  மை பயன்படுத்தலாம்.(பி.கு: கண்காணிப்பாளர் (Superintendent) கிரேடு பே 4800,செவிலியர் (Staff Nurse) கிரேடு பே 4450 இவர்களும் சான்றொப்பம் இடலாம்)

A கிரேடு அலுவலர்கள் (கிரேடு பே 6600 க்கு மேல் பெறுபவர்கள்) மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்பு எழுத மட்டும் பச்சை வண்ண மையினை பயன்படுத்தலாம்.( யார் A grade  அலுவலர்கள்? இதனை தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.)

இதிலிருந்து தெரிய வருவது சான்றொப்பம் (Attestation) தவிர ஏனைய கையெழுத்துக்களை யாரும் பச்சை மைகொண்டு எழுதக் கூடாது.

பட்டியல்களில்,கடிதங்களில்,பதிவேடுகளில், பச்சை மை கொண்டு அரசு அலுவலர்கள் கையொப்பம் இடுவது விதிகளுக்கு முரணானது.



http://www.scribd.com/fullscreen/71883531?access_key=key-21a52msc721yrkn9b3po

சான்றொப்பத்திற்கு பச்ச்சை மை                                                                                           

4 comments:

Umapathy said...

அய்யா வணக்கம் பி கிரேடு அலுவலர்களும் சான்றொப்பம் இடலாமா?
இது தொடர்பான அரசாணை இருந்தால் தயவு செய்து பதிவேற்றம் செய்யவும்,
நன்றி அய்யா

Umapathy said...

தற்போதுதான் அந்த ஆணையை பார்த்தேன்,
tamilnurse.com ல் பதிவிட அனுமதி அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

scribd லிங்க் கொடுங்கள் நண்பரே.அங்கு செல்பவர்கள் இன்னும் பல அரசு ஆணைகளை பார்க்க ஏதுவாக இருக்கும்.

Umapathy.m said...

நன்றி அய்யா கண்டிப்பாக scribd link கொடுக்கிறேன்