மீண்டும் தடுப்பூசிப்பணிகள் துணைசுகாதார நிலயத்திலேயே இந்த மாதம் (நவம்பர்2011) முதல் செயல் படுத்த உத்தரவிடப்படடுள்ளது.இது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர் கடைபிடிக்கவேண்டியவைகள் பற்றிய துறையின் குறிப்புகளை அடுத்த பதிவில் இடுகிறேன்.ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணிகள் செல்கிறது.துணை சுகாதார நிலையங்களில் தடுப்புசி பணிகளில்(திருவள்ளூர் மாவட்டம்) சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதனால் (2008) லிருந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பணிகள் நடந்து வந்தது.அதற்கு முன் வரை துணை சுகாதார நிலையத்திலேயே இப்பணி நடந்தது.இவ்வாறு மாற்றம் ஏற்பட்ட போதும் 14.11.2008 ல் ”தடுப்பூசி பெரிய சவால்” என்ற பதிவு இடப்பட்டது.விரிவான விவாதமும் டாக்டர்SUREஷ் மற்றும் டாக்டர் புருனோ Bruno ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.இம் மாற்றம் ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
இப்போது மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணி ஏன் செல்கிறது?
கீழ்கண்டவாறு தினமலர செய்திவெளியிட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=341658
”கிராம மக்கள், அதிக தூரத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. இதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்தது.எனவே, குழந்தைகள் நலன் கருதி, துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன் பேரில், மீண்டும், அனைத்து துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட, அரசு அனுமதி அளித்துள்ளது.”
”தடுப்பூசிகள் ஆபத்தானவையா” என்ற இப்பதிவும் படிக்க வேண்டியது.

No comments:
Post a Comment