14 December 2011

பணிஓய்வு




திருமதி.எஸ்.பங்கஜவள்ளி அவர்கள் பகுதி சுகாதார செவிலியராக தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்தார்.இவர் 26.10.2011 அன்று சுய விருப்பத்தின் பேரில் பணிஓய்வு பெற்றார் அவருக்கான பிரிவு உபசார விழா தோகைமலையில் நடைபெற்றது.

தனது பணிக்காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றியவர் இவர்.சிறந்த மனிதநேயம் மிக்கவர்.. தனது வேலையை பார்ப்பதற்கே சிரமப்படும் ஊழியர்களைப் போலல்லாமல் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்து செய்யக்கூடியவர்.இதுவரை அவர் பணியாற்றிய அலுவலர்களிடம் நற்பெயர் எடுத்தவர்.இன்னும் நிறைய பணிக்காலம் அவருக்கு இருக்கிறது இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக இவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றுள்ளார்.


சாதாரணமாக துறையில் “சிஸ்டர்” என்ற பதம் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும்.உண்மையில் அதன் பொருள் பூரணமாக இவருக்குப் பொருந்தும்.ஒரு சின்ன உதாரணமாக உடன் பணியாற்றும் ஒரு சக ஊழியரின் பெண் திருமணம்.அவருக்கு நிதி தட்டுப்பாடு.வட்டிக்காவது ஒரு லட்சரூபாய் பணம் கிடைத்தால் பரவாயில்லை என்கிற நிலையில்  அதைப்பற்றி பங்கஜவள்ளி சிஸ்டருடன் பகிர்ந்து கொள்கிறார். உடனடியாக தனது கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை கழற்றிக் கொடுத்து என்னிடம் இப்போது பணமில்லை இதை வைத்து திருமணத்தை நடத்துங்கள் உங்களுக்\கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது மீட்டுத்தாருங்கள் என்று கூறியுள்ளார்.


இதில் என்ன சிறப்பு எனில் இந்த விவரம் ஆரம்ப சுகாதார நிலைத்தில் யாருக்கும் தெரியாது.இவரது பிரிவு உபசார விழாவில் பயனடைந்த சகோதரி தனது கண்ணீருக்கு இடையே இந்த சம்பவத்தை கூறியபோது தான் மற்றவர்களுக்கே தெரியும்.

 உதவி செய்வது மட்டுமில்லாமல் அதை பிரபலப்படுதிக்கொள்ளாத மனோபாவம் போற்றுதலுக்குரியது.இவரது பிரிவு உபசார விழாவிற்கு உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்கள் வருகை தந்து இவரை கவுரவித்தார்.

இவருடன் இவர் காலத்தில் பணியாற்றிய நினைவுகள் என்றும் மனதில் இருக்கும்.

வாழ்த்துக்கள் சகோதரி.

5 comments:

Samuel Johnson said...

சகோதரிக்கு என் வாழ்த்துகள்..முன் மாதிரியாகவும் பலராலும் விரும்பபடுபவரகவும் இருந்திருப்பார் என நினைக்கிறேன்...
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

Mohan- FES said...

Congratulations
on your well deserved
retirement,
and we wish u
happiness
in the years ahead.

"Never Retirement for well wisher"
........To be continued....

Arun Akilendraa said...

Really proud of you mom... :)

anjali said...

love you chithi kutty... :-) cho chweet u r..! :)

anjali said...

love you chithi kutty :-) cho chweet u r .! :)