29 November 2011

அரசுப்பணியிலிருந்து விலக படிவம்

துறைப் பணியிலிருந்து மருத்துவர் ஒருவர் விலக வேண்டும் எனில் கிழ்கண்ட படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்ட மனுவினை உரிய வழிமுறையாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Resignation Form

28 November 2011

எக்ஸ்ரே படங்களை நோயாளிகளே பெற்றுக்கொள்ளலாம்

அரசு மருத்துவமணைகள் மற்றும் மேம்படுத்தப்பட ஆரம்ப சுகாதார நிலயங்களில் செயல்படும் எக்ஸ்ரே பிரிவுகளில் நோயாளிகளுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரே படங்களை   மருத்துவ சிகிச்சைக்குப் பின் நோயாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.G.O.Ms.No.841 Health and FW dept., dt.16.11.1994 ன் படி பல் தொடர்பான எக்ஸ்ரேபடங்களுக்கு ரூ.5.00 இதர எக்ஸ்ரேக்களுக்கு ரூ.20.00 கொடுத்து பிலிம்களை பெற்றுச் செல்லலாம்.
xray

27 November 2011

20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110​ன் கீழ் 10.09.2011 அன்று ஒரு அறிக்கை வாசித்தார்.அதன் படி  தமிழகத்தில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை 26.11.2011 அன்றுவெளியிட்ட அறிவிப்பு:


துவக்கப்பட உள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்


திருச்சி மாவட்டத்தில் சமயபுரம்,


 வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம், சுமைதாங்கி, 


கிருஷ்ணகிரி அருகே உள்ள பேஜிபள்ளி, 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் திருநாவலூர் வட்டாரத்தில் சேந்தநாடு, சின்னசேலம் வட்டாரத்தில் அம்மாகளத்தூர், 


நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் மதிரவேலூர்,


 திருப்பூர் சுகாதார மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, 


பெரம்பலூர் சுகாதார மாவட்டம் பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர், 


ஈரோடு சுகாதார மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், நம்பியூர் வட்டாரத்தில் மலையம்பாளையம்,


 திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரத்தில் கோரட்டி,


 சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தென்மலை, 


திருவள்ளுர் சுகாதார மாவட்டம் திருவள்ளூர் வட்டாரத்தில் கல்யாணகுப்பம்,


 பழனி சுகாதார மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் கனப்பாடி,


 புதுக்கோட்டை சுகாதார மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் ராப்பூசல்

கரூர் சுகாதார மாவட்டம் தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம் கே.பரமத்தி வட்டாரத்தில் தம்பிவாடி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஒக்கநாடு கீழையூர்,


 தூத்துக்குடி சுகாதார மாவட்டம் தூத்துக்குடி வட்டாரத்தில் லூர்தம்மாள்புரம்


 ஆகிய 20 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.7.71 கோடி செலவாகும்.


 தரம் உயர்த்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
 அறந்தாங்கி சுகாதார மாவட்டம் கரம்பகுடி வட்டாரம் மலையூர், 


செய்யார் சுகாதார மாவட்டம் அனுக்காவூர் வட்டாரம் அக்கூர், 


கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் 
நல்லாட்டிபாளையம்,


 ஈரோடு சுகாதார மாவட்டம் டி.என்.பாளையம், 


கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் ரிஷிவந்தியம், 


பழனி சுகாதார மாவட்டம் குஜிலியாம்பாறை, 


பூந்தமல்லி, சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம் லத்தூர் வட்டாரம் பழஞ்சூர்,


 சேலம் சுகாதார மாவட்டம் கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையம், 


சிவகங்கை சுகாதார மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் பூவந்தி, 


சிவகாசி சுகாதார மாவட்டம் வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டி, 


தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாயகிபுரம்,


 திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பம், 


வில்லிவாக்கம் வட்டாரம், போரூர், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் கந்திலி வட்டாரம், குனிச்சி, காட்பாடி வட்டாரம், திருவலம், 


திருப்பூர் சுகாதார மாவட்டம் குடிமங்கலம், 


திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டி,


 உதகமண்டலம் சுகாதார மாவட்டம் கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டை,


 விழுப்புரம் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம், மேல்சிதாமூர்


       என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு ரூ.22.55 கோடி செலவாகும்.


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் புதிய ஆணை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பாக புதிய அரசு ஆணை G.O.(MS) No.276 H&FW dept dt.03.11.2011 வெளியிட்டுள்ளது .அரசு வலைத்தளத்தில் இவ்வாணை வெளியிடப்படவில்லை ஏனென்று தெரியவில்லை , எனவே,ஆரசு ஆணை ஸ்கேன் செய்யப்பட்டு இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,இது முழுமையாக தமிழில் வெளியிட்டிருந்தால் பொதுமக்களுக்கும்,கிராம சுகாதார செவிலியர்,அங்கன்வாடி பணியாளர் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
சிறப்பம்சங்கள்

  • உதவித்தொகை ரூ 6000 க்கு பதிலாக ரூ.12000
  • 4000 வீதம் மூறு தவணைகளில்
  • ஆன் லைன் PICME பதிவு அவசியம்
  • முதல் 4000 ஆன் லைன் பதிவின் அடிப்படையில்
  • அரசு மருத்துவமணை , ஆரம்ப சுகாதார நிலையம்,இங்கெல்லாம் பிரசவம் நடை பெற்றிருந்தால் மட்டும் வழங்கப்படும்
  • தனியார் மருத்துவ மணை பிரசவங்களுக்கு கிடையாது
  • 01.06.2011 லிருந்து நடக்கும் பிரசவங்களுக்கு மட்டும் பொருந்தும்.
நேரடியாக கூகிளிலிருந்து டவுன்லோடு செய்ய இங்கே செல்லவும்
https://docs.google.com/document/d/1BK5r7UiC9mV4-O6O7DLwcZI9BDH70-0p2Vdx63pxwNg/edit
Drmrmbs Go

உலக நீரழிவுநோய் தினம்

world diabetes day November 14





Charles Herbert Best
Best circa 1924
BornFebruary 27, 1899
West Pembroke, Washington County,Maine
DiedMarch 31, 1978 (aged 79)
TorontoOntario
Known forCo-discoverer of insulin
Notable awardsOrder of Canada
Order of the British Empire
Order of the Comp



Sir Frederick Grant Banting
KBE MC FRS FRSC

BornNovember 14, 1891
AllistonOntarioCanada
DiedFebruary 21, 1941 (aged 49)
Dominion of Newfoundland, now part ofNewfoundland and LabradorCanada
NationalityCanadian
Alma materUniversity of Toronto
Known forDiscovery of insulin
Notable awardsNobel Prize in Physiology or Medicine(1923)
Signature




உலகம்  முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்ர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உண்டுபண்ணுவதற்காக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 , ல்  சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
இப்படி ஒரு கருத்தை விதைத்தவர்கள் சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பும்(International Diabetes Federation) & உலக நல நிறுவனமும்(World Health Organization) தான்.
 இந்த தினம் 1991 லிருந்து உலக மக்களிடையே, அவர்களின் பழக்க வழக்கங்கள் மூலம் நாம் பயப்படக் கூடிய அளவில் உயர்ந்து கொண்டிருக்கும் சர்க்கரை நோய் விகிதத்தை கட்டுப் படுத்தவே அனுசரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும், இதற்காக ஒரு புது கருத்து உள்ளே நுழைத்து,உலக சர்க்கரை நோயாளிகளிடம் ஓர் அறைகூவல் விடுக்கின்றன;  கொண்டாடுகின்றன. அப்படி ஒரு விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடையே, ஆண்டு முழுவதும் விதைக்கப் பட்டாலும், நவம்பர் 14 ம் நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அன்றுதான், சர்க்கரையைக் கட்டுபடுத்தும் ஹார்மோனாகிய  இன்சுலினைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஒருவர் பிறந்தார்.


பாண்டிங்(Frederick Banting) மற்றும் சார்லஸ் பெஸ்ட்(Charles Best) என்ற இரு விஞ்ஞானிகளும் 1922 ல் இண்சுலின் கண்டுபிடித்தனர். இவர்களுள் பிரடெரிக் பாண்டிங் கின் பிறந்த தினம்தான்,நவம்பர் 14 . அதனால் நவம்பர் 14 லே,  உலக சர்க்கரை தினமாக அனுசரிக்கப்படுகிறது.


 2009 -2013 என 5 ஆண்டுகள் முழுமைக்கும் சர்க்கரை நோய்க்கான கல்வி மற்றும் தடுப்பு நடவடிக்கை  என்ற தலைப்பில் விழிப்புணர்வு தர திட்டம். 2000 ம் ஆண்டு தகவல் படி, சர்க்கரை நோய் அதிகம் உள்ள உலகின் முதல் 5 நாடுகள். இந்தியா: 4 .09 கோடி, சீனா: 3 .69 கோடி, அமெரிக்கா: 1 .92 கோடி ரஷ்யா::௦.0.96 கோடி, ஜெர்மனி:0.74 கோடி. இதில் முன்னிலையில் நிற்பது நாமதாங்க..!

உலக சர்க்கரை நோய் தின குறியீடு/அடையாளம்/முத்திரை என்பது “நீல வட்டமே.” இந்தகுறியீடு 2007 ல் சர்வ தேச உலக சர்க்கரை நோய் தின உறுதி மொழியுடன் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீல வட்டம், நாகரிகம் கடந்த வாழ்க்கை மற்றும் உடல்நலத்தைக் குறிக்கிறது. நீல வண்ணம் வானைப் பிரதிபலிக்கிறது. அனைத்து நாடுகளுக்கும் வானமே எல்லை. நீல வட்டமும், உலக சர்க்கரை நோயாளிகள் சமூகத்தை ஒரு வட்டத்துக்குள் இணைக்கிறது.

உலக நீரழிவுநோய் தின கருத்தரங்கு மற்றும் பரிசோதனை முகாம் மரு.சிராஜீதீன் அவர்கள் தலைமையில் குளித்தலை ஒன்றியம் வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18.11.2011 அன்று ஆதிநத்தம் கிராம பள்ளியில் நடைபெற்றது .சில புகைப்படங்கள் கீழே.







துணை சுகாதார நிலைய தடுப்பூசிப் பணிகள்

தடுப்பூசிப் பணிகள் மீண்டும் துணை சுகாதார நிலையத்திலேயே நடைபெறுவது தொடர்பான துறையின் கடிதம் R.No.13265/Immn/S3/2011 dt.21.10.2011 ல் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

  • புதன்கிழமைகளில் துணை சுகாதார நிலையங்களில் 1-11-2011 முதல் தடுப்பூசிப் பணிகள் நடைபெறுவதை கால தாமதம் செய்யக் கூடாது.
  • புதன் கிழமைகளில் குழந்தைகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் அவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும்.(துணை சுகாதார நிலையத்தில் தான் போடவேண்டும் என திருப்பி அனுப்பக்கூடாது)
  • புதன் கிழமை விடுமுறை தினமாக அமைந்து விட்டால் வரும் வெள்ளிக்கிழமை இப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
  • ஒரு வாரம் கூட துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் பணிகள் நடைபெறாமல் இருக்கக் கூடாது.
  • பி-கு( இதுவரை R.No.13265/Immn/S3/2011 dt.17.02.2011 DPH&PM Chennai in படி தடுப்பூசிப்பணிநாட்கள் விடுமுறை தினமாக இருந்தாலும் தடுப்பூசிப்பணி நடைபெறவேண்டும் என இருந்தது, இந்த கடிதம் மூலம் மாற்றாக அந்த வாரவெள்ளிக் கிழமையன்று தடுப்பபூசிப்பணி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

10 November 2011

மீண்டும் தடுப்பூசிப்பணிகள் துணைசுகாதார நிலயத்திலேயே

மீண்டும் தடுப்பூசிப்பணிகள் துணைசுகாதார நிலயத்திலேயே இந்த மாதம் (நவம்பர்2011) முதல் செயல் படுத்த உத்தரவிடப்படடுள்ளது.இது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர் கடைபிடிக்கவேண்டியவைகள் பற்றிய துறையின் குறிப்புகளை அடுத்த பதிவில் இடுகிறேன்.ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணிகள் செல்கிறது.துணை சுகாதார நிலையங்களில் தடுப்புசி பணிகளில்(திருவள்ளூர் மாவட்டம்) சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதனால் (2008) லிருந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பணிகள் நடந்து வந்தது.அதற்கு முன் வரை துணை சுகாதார நிலையத்திலேயே இப்பணி நடந்தது.இவ்வாறு மாற்றம் ஏற்பட்ட போதும் 14.11.2008 ல் ”தடுப்பூசி பெரிய சவால்” என்ற பதிவு இடப்பட்டது.விரிவான விவாதமும் டாக்டர்SUREஷ் மற்றும் டாக்டர் புருனோ Bruno  ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.இம் மாற்றம் ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கு பதிவு செய்யப்படுகிறது.


இப்போது மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணி ஏன் செல்கிறது? 
கீழ்கண்டவாறு தினமலர செய்திவெளியிட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=341658
”கிராம மக்கள், அதிக தூரத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. இதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்தது.எனவே, குழந்தைகள் நலன் கருதி, துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன் பேரில், மீண்டும், அனைத்து துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட, அரசு அனுமதி அளித்துள்ளது.”
தடுப்பூசிகள் ஆபத்தானவையா” என்ற இப்பதிவும் படிக்க வேண்டியது.

ஹிந்து நாளிதழில் எமது வலைப்பூ பற்றிய செய்தி.

10.11.2011 The Hindu வில் எமது வலைப்பூ பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.நான்கு வருடங்களாக தொடர் பதிவுகள் செய்தமைக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் உண்ர்கிறேன்.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2613489.ece



07 November 2011

சான்றொப்பம் Attestation

சான்றொப்பம் இடக்கூடிய அலுவலர்கள் ( attestation ) யார்?
அரசு ஆணை எண் 189 P&A R (s) Dept dt. 18.07.2007 ல் அரசு இதனை தெளிவு படுத்தியுள்ளது.
யார் சான்றொப்பம் இடலாம்                                                                                            

2012 அரசு விடுமுறை தினங்கள்

2012 அரசு விடுமுறை தினங்கள்                                                                                            

பச்சை மையினால் யார் எழுதலாம்? யார் கையொப்பம் இடலாம்?

அரசு அலுவலகங்களில் பச்சை மை பயன்படுத்துவது தொடர்பான அரசு ஆணை,பச்சை மைகொண்டு யார் எழுதலாம் யார் கையொப்பம் இடலாம் என இதில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

இதன்படி

 அரசு அலுவலகங்களில் நிலைத்த நீலம், கருப்பு,சிவப்பு ஆகிய மை யினால் மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத,கையெழுத்திட வேண்டும் ,

மற்ற நிற மையினால் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

. சான்றொப்பம் (Attestation)  இட அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டும் (A Grade and B Grade)( கிரெடு பே 4400 லிருந்து  பெறுபவர்கள்) சான்றொப்பம் இட மட்டும் பச்சை வண்ண  மை பயன்படுத்தலாம்.(பி.கு: கண்காணிப்பாளர் (Superintendent) கிரேடு பே 4800,செவிலியர் (Staff Nurse) கிரேடு பே 4450 இவர்களும் சான்றொப்பம் இடலாம்)

A கிரேடு அலுவலர்கள் (கிரேடு பே 6600 க்கு மேல் பெறுபவர்கள்) மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்பு எழுத மட்டும் பச்சை வண்ண மையினை பயன்படுத்தலாம்.( யார் A grade  அலுவலர்கள்? இதனை தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.)

இதிலிருந்து தெரிய வருவது சான்றொப்பம் (Attestation) தவிர ஏனைய கையெழுத்துக்களை யாரும் பச்சை மைகொண்டு எழுதக் கூடாது.

பட்டியல்களில்,கடிதங்களில்,பதிவேடுகளில், பச்சை மை கொண்டு அரசு அலுவலர்கள் கையொப்பம் இடுவது விதிகளுக்கு முரணானது.



http://www.scribd.com/fullscreen/71883531?access_key=key-21a52msc721yrkn9b3po

சான்றொப்பத்திற்கு பச்ச்சை மை