05 August 2009

தொடர் கேள்விபதில்

அழைத்த

>மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

அவர்களுக்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? அம்மாவின் அப்பா பெயர் வேங்கட்ராமன்.அப்பாவின் அப்பா பெயர் சுப்ரமணியன்.இதன் காரணமாக தாத்தாவால் வைக்கப்பட்ட பெயர். சிறுவயதில் நீளமான பெயர் பிடிக்காமலிருந்தது.ஸ்,ஷ்..சேர்ந்த மூன்றெழுத்துப்பேர் ஸ்டெயிலாக இருந்திருக்கலாம் என நினைப்பேன். இப்போது அம்மா, அப்பா, மனைவி, மாதிரி என்னோடது என்பதில் சந்தோஷம் உண்டு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இது அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.என் அப்பாவின் இளமைக்கால நெருக்கமான நண்பரை போனவாரம் தற்செயலாக சந்தித்தபோது.(1984 ல் எனது தகப்பனார் இறந்தார்.)அப்பாவையே நேரில் பார்த்தது போல இருந்தது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்.ம்..ஹூம்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
சூடாக சாம்பார்,ரஸம்,மோர்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பயம் தனியாக ராட்டிணம் சுற்றுவது மாதிரி
அருவி சுகம் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ராட்டிணம் சுற்றுவது போல.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா? பெண்ணா?
பாடி லாங்வேஜ்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ? கர்வம்.இரண்டுக்கும் இது தான் பதில்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : என் மீது அக்கறை
பிடிக்காத விஷயம் : என் மீது ஓவர் அக்கறை
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
அப்பா. அவர் உயிரோடு இருக்கும் வரை உருப்படாத பிள்ளையாய் இருந்துவிட்டேன்.இப்போது இருந்தால் சந்தோஷப்படுவார். எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இன்று ஆவணியாவிட்டம் பூனூல் மாற்றிக்கொண்ட கையோடு இருக்கிறேன்.சட்டை இல்லை .வேட்டி மட்டும்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பாட்டு எதுவும் இப்போது கேட்கவில்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? வெள்ளை
14.பிடித்த மணம்?
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
அதிகாலை தலயணைசூட்டு மணம்
பசி நேரத்தில் சமயலரையிலிருந்து வரும் தாளிக்கும் வாசனை.
குளிகாலத்தில் போர்வைக்குள் அடுத்த உயிரின் சுவாசம்.
அலைச்சலில் வீடு திரும்பும் போது மனைவி செய்யும் பூஜை மணம்.
நிறைய....உள்ளது.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.R.P. ராஜ நாயஹம் http://rprajanayahem.blogspot.com/ அனுபவக் கடல் 2.அகநாழிகை வாசுதேவன்http://aganaazhigai.blogspot.com/ கவித்துவமான மனிதர் 3.லதானந்த் http://lathananthpakkam.blogspot.com/ சிங்கம்
4.சபாநாயகம் சார் .http://ninaivu.blogspot.com/ என் மண்ணின் மைந்தர்.குரு.
5.http://kanavukale.blogspot.com/
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ? http://www.payanangal.in/2008/10/blog-post_15.html http://www.payanangal.in/search/label/அரசு_ஊழியர் 17.
பிடித்த விளையாட்டு ?
கிரிக்கெட்,ஷெட்டில்,
18.கண்ணாடி அணிபவரா?
படிக்கும்போது
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சேரன் படங்கள் மாதிரி
20.கடைசியாகப் பார்த்த படம்?
பொண்ணு ஊருக்குப் புதுசு.
(பி.கு.கிராம சுகாதார செவிலியின் கதை,நன்றி மோசர் பியர்)
21.பிடித்த பருவ காலம் எது?
பின் பனிக்காலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
கீதை(சித்பவானந்தர் உரை தினமும் ஒரு பக்கமாவது)
கோயிலொழுகு 5ம் பாகம்
வடு (கே.ஏ.குணசேகரன்)
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எத்தனை மணி நேரத்திற் கென்று என் இளய மகன் விபின் சந்தரிடம் தான் கேட்கவேண்டும். 24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மழை பெய்யும் சத்தம் பிடிக்கும்
பெய்து ஓயும் சத்தம் பிடிக்காது.
(பெய்து கொண்டிருக்கும் போதே தூங்கிவிட வேண்டும் என நினைப்பேன்)
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
திருப்பதி
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியவில்லை.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அவமதிப்பு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நான் எனும் கர்வம்.அகங்காரம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மூணார்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எழுத்தாளனா,சினிமா டைரக்டரா,பத்திரிக்கையாளரா,அரசியல்வாதியா, ஆன்மீக வாதியா, வயசுக்கு ஏத்த மாதிரி எப்படியெல்லாமோ இருக்க கனவு கண்டு, இப்போது இருப்பது சராசரி அரசு ஊழியனா.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
துணையின் பெருமை பற்றி அடுத்தவரிடம் சொல்வது.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பாசவலை.

6 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்தப் பதிவு.

தொடர்ந்து இருக்கிறேன்

இந்தப் பதிவில்

தமிழ் ஓவியா said...

//1.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

இன்று ஆவணியாவிட்டம் பூனூல் மாற்றிக்கொண்ட கையோடு இருக்கிறேன்.சட்டை இல்லை .வேட்டி மட்டும்//

பூணூல் அணிவது என்பது தேவையா? சரியா?

புருனோ Bruno said...

//6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பயம் தனியாக ராட்டிணம் சுற்றுவது மாதிரி
அருவி சுகம் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ராட்டிணம் சுற்றுவது போல.
//

சூப்பர் :) :)

லதானந்த் said...

பதிலகள் தனித்தன்மையோடு இருந்தன.
வாழ்த்துக்கள். வேறு ஏதோ பதிவர் அழைத்து ஏற்கனவே நான் பதில் சொல்லிவிடேன்.
எனினும் என்னை அழைத்தமைக்கு நன்றி!

சே.வேங்கடசுப்ரமணியன். said...

"புருனோ".கேள்விகளை கேட்டு என்னை யோசிக்க வைத்ததே நீங்கள் தான்.நன்றி

சுரேஷ் // உங்கள் பதில்களும் அருமை.சிலது ஒத்துப்போகிறது.நன்றி

லதானந்த்// அந்த லிங்க் கை கொடுங்கள்.அம்மணியை பற்றி என்ன சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆசை.

தமிழ் ஓவியா// சகோதரி என்னை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுங்களேன்.சிலதுகளை கேள்வியே கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசுவது மாதிரி.ஏன் மூக்குக்கு லிப்ஸ்டிக் பூசுவதில்லை என நாம் கேள்வி கேட்பதில்லை.இவன்... இப்படித்தான்......

Vijayashankar said...

very nice. :-)