14 January 2010

பொங்கல் 2010

பொங்கல் விழா 2010 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டாடப்பட்டது.மரு.மணிமேகலை , மரு.சங்கரவடிவு மற்றும் மரு.சி.சீதாலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அனைத்துப் பனியாளர்களும் கலந்து கொண்டனர்.




















zwani.com myspace graphic comments

11 January 2010

போலியோ 2010


  • கரூர்: கரூர் பஸ்நிலையத்தில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமை கலெக்டர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார்.
  • பின்னர் அவர் பேசும் போது, கரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் படவுள்ளது. விடுபட்டவர் களுக்கு வீடுதேடி சென்று சொட்டு மருந்து வழங்கும் பணி இன்று (11ம் தேதி) முதல் 3 நாட்கள் நடை பெறும். கரூர் மாவட்டத்தை போலியோ இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
  • சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதாசிவம், நகராட்சித் தலை வர் சிவகாமசுந்தரி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜேந் திரன், துணை ஆளுநர் ஜெயபாலன், கரூர் ரோட்டரி கிளப் தலைவர் காளி யப்பன், ஒருங் கிணைப் பாளர் குணசேகர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் ஆனந்தா சேகர், கரூர் தாசில்தார் தர்மராஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

09 January 2010

அஞ்சலி


எங்களுடன் பணியாற்றும் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த கீழவெளியூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி திருமதி..பாப்பாத்தி அவரகளின் புதல்வி செல்வி விஷ்ணுப்பிரியா 06.01.2010 அன்று ஊத்தங்கரையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
+2 படித்துவந்தவர் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் ஏறும் போது இடறி விழுந்து தலையில் பலமான அடிபட்டு மூளை செயலிழந்து போனது.
பாப்பாத்தி அவர்கள் ஊத்தங்கரையில் ஊட்டச்சத்து பணியாளராகப் பணிபுரிந்து கிராம சுகாதார செவிலியாக கரூர் மாவட்டம் காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிநியமனம் பெற்றவர்.குடும்பம் ஊத்தங்கரைக்கு அருகில் கொமாரப்பட்டி எனும் சிறு கிராமம்.குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டு இவர்மட்டும் கீழவெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.புத்தாண்டு தினத்தன்று கூட ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்க,அவர்களுடன் இருக்க விடுப்பு எடுக்க முடியாமல் பணியாற்றினார்.தகவல் தெரிந்ததும் வட்டார அளவில் 32 ஊழியர்கள் இரண்டு தனியார் வாகனத்தில் சேலம் சென்று அங்கு அரசு மருத்துவமணை பிணவரையில் கிடத்தப்பட்டிருந்த வேரோடு பிடுங்கப்பட்ட இளம் கொடியைப்போல கிடந்த அந்த செல்வத்தை பார்த்து பார்த்து க‌ண்கல‌ங்கினோம்.விரைவாகபோஸ்ட்மார்டம் செய்யஅங்கிருந்த கண்மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த உதவிபுரிந்தனர்.
போஸ்ட்மார்டத்திற்கு முன்னதாக சடலத்தைப்பார்க்க அனுமதிக்கும் படி நான் அங்கிருந்த பொறுப்பு பெண்மருத்துவ அலுவலரைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன்.எங்களது உணர்வைப்புரிந்து கொண்டு அனுமதி வழங்கினார்.பிறகு அங்கிருந்து அரூர் வழியாக ஊத்தங்கரை செல்லும் வழியில் அரூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள"கொமாரபட்டி" கிராமத்திற்குச் சென்று சகோதரி பாப்பாத்திக்கு சொல்லமுடியாதஆறுதலைச் சொல்லி துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.
அவருக்கு ஒரே பெண்.இரண்டு ஆண்மக்கள்.தாயை பிரிந்து இருந்த குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்ட பாப்பாதியின் கணவர் திரு.ராஜாவின் கண்ணீர் எல்லோரையும் கலங்கடித்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னர் 04.01.2010 அன்று தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் பேசிய பாப்பத்தியின் பேச்சு எல்லோரையும் கரைத்தது.
"இந்த வேலைக்கு வர்ரத்துக்கு முன்னாடி த்துணவுல புள்ளைகள பாத்துகிட்டிருந்தேன். இந்த ஊருக்கு வரும் போது எதுவுமே தெரியாமத்தான் வந்தேன்.வந்த பிறவு கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.இப்போ நல்லா தனியாவே டெலிவெரி பாக்குறேன்.அப்புடி நானே பாக்கும் போதுதான் "உயிரோட மதிப்பு என்னான்னு எனக்கு தெரிஞ்சுது"‍ இது அவரது பேச்சின் ஒரு பகுதி.
இந்த மாதிரியான‌ இழப்பு யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்தச் சகோதரி இனியாவது குடும்பத்துடன் வாழ்வதற்கு ஏற்றவாறு அரூர் அல்லது ஊத்தங்கரைப் பகுதியில் இவருக்கு மாறுதல் வழங்கி உதவலாம்.வந்தியத்தேவன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் இயக்குனரின் பார்வைக்கு இச் செய்தியை கொண்டு சென்று இவரது மாறுதலுக்கு உதவலாம்.