Showing posts with label கண் மருத்துவ உதவியாளர். Show all posts
Showing posts with label கண் மருத்துவ உதவியாளர். Show all posts

27 August 2011

கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

31.08.11 ஆனந்தவிகடனின் இணைப்பிதழான என்விகடன் ( திருச்சி,தஞ்சை,கரூர் பதிப்பு) இதழில் ஒரு கேள்வி பலரிடம் கேட்கப்பட்டு அதற்கான பதில் பெறப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

                         ( படத்தை கிளிக் செய்து செய்தியை படியுங்கள்)


கேள்வி:கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில் :( மலர்ச்செல்வி ஆசிரியை கும்பகோணம்)
“சமீபத்தில் எங்க பள்ளிகூடத்துக்கு பார்வைப் பரிசோதனைக்கு வந்த மருத்துவர்கள் எல்லாம் ரொம்ப அர்ப்பணிப்பா வேலை பார்த்தாங்க.எங்களைப்போல ஆசிரியர்களுக்கும் பிள்ளைங்க கிட்ட உள்ள பார்வை குறைபாடுகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு சொல்லித்தந்தாங்க.அதனால் நிறைய பசங்களோட பிரச்சனைகளைக் கண்டுபிடிச்சு பெற்றோர்கிட்ட தெரியப்படுத்தினோம்.இந்த மாதிரியே எல்லா மருத்துவர்களும் இருந்தா நம்ம நாடு எவ்வளவு சுகாதாரமா இருக்கும்கிற எண்ணத்தை அவங்க உருவாக்கிட்டாங்க.மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்குற மனசு உள்ள நிறையபேர் மருத்துவத்துறைக்கு வரணும்னு கடவுள் கிட்ட நான் கேட்பேன்”
இது பொதுசுகாதாரத்துறையின் சாதனை என்றே சொல்லவேண்டும்.மனமாற வாழ்த்திய ஆசிரியைக்கும் மனங்குளிர பணியாற்றிய கும்பகோணம் கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்

03 June 2011

கண்மருத்துவ உதவியாளர்கள் சங்க செயற்குழு

29.05.2011 Tamil Nadu Government Ophthalmic Assistants Association:State general council meet, Poomalai Rural Mart, Bharathidasan Salai, 9 a.m.






08 March 2010

செவ்வரி ஓடிய விழிகள்









செவ்வரி ஓடிய விழிகள் என இலக்கியத்தில் வர்ணித்திருப்பதை படித்திருப்பீர்கள்.பார்த்திருக்கிறீர்களா?. பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மின் அஞ்சலில் அனுப்பிய செவ்வரி யோடிய விழிகள் சில.
( குறைபாடுடையவை)

24 July 2009

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்2

பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளார் திரு.இரவிச்சந்திரன் தனது குழுவினருடன் பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்தல் சில காட்சிகள்

20 June 2009

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்


கரூர் மாவட்டத்தில் துவக்க விழா




முதலமைச்சர் மு கருணாநிதியின் 86ஆவது பிறந்த நாளான (ஜுன் 3-2009) தமிழகத்தில் 6,7,8, வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு, கண் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்ட்டது


சிறப்பு கண்ணொளி திட்டம்
பள்ளிக்கூடங்களில் படிக்கும் 4.7 சதவீத மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால் பார்வை குறைபாட்டை சரி செய்ய இயலும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் சுமார் 24 லட்சம் பள்ளி சிறார்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுவின் மூலம் கண் பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு பயிற்சி

ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவ உதவியாளர்களால் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடையே பார்வை குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மேல்பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள். கண் மருத்துவ உதவியாளர்கள் பார்வை குறைபாட்டின் தன்மையை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் கண்களுக்கு கண்ணாடிகள் வழங்குவார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் கண்ணாடிகள் மிகவும் பாதுகாப்பானவை, மிகவும் தரமானவை, உடைபடாத தன்மை கொண்டவையாகும். பார்வை குறைபாடு சுமார் 2 லட்சம் சிறார்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது என உத்தேசமாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்புறங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


இந்த திட்டத்திற்கென ரூ.5.38 கோடி நிதி தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளான 15.9.2009 அன்று இத்திட்டம் நிறைவடையும்.


இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில்

132 நடுநிலைப் பள்ளிகள்,

48 உயர்நிலைப் பள்ளிகள்,

43 மேல்நிலைப் பள்ளிகள்

ஆக மொத்தம் 223 பள்ளிகளில் பயிலும்

சுமார் 44,788 மாணவ-மாணவிகளுக்கு

கண் பரிசோதனை செய்யப்படவுள்ளது.


27 March 2009

கண் மருத்துவ உதவியாளரின் பணிகள்







கண் மருத்துவ உதவியாளரின் பணிகள் தொடர்பான சில புகைப்படங்கள் இங்கே.
பள்ளி மாணவர்கள் நல திட்ட மருத்துவ பரிசோதனையின் போது




துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருடன் இலவச கண்ணாடி வழங்கப்பட்ட மாணவி




மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருடன் இலவச கண்ணாடி வழங்கப்பட்ட மாணவ மாணவிகள்












இலவச கண்ணாடி வழங்கப்பட்ட மாணவ மாணவிகள்




























கண் மருத்துவ உதவியாளர்


தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோகனகுமார் அவர்கள் திங்கள், வெள்ளி ஆகிய தினங்களிள் புற நோயாளிகளைப் பார்வையிடுகிறார்.

செவ்வாய் கிழமை சேப்ளாப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும்,
புதன் கிழமை காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் விஜயம் செய்கிறார்.

பிரதி வியாழக்கிழமைகளிள் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுற்று முறையில் பள்ளி சிறார் நலத்திட்ட பள்ளிக்குச்செல்லும் மருத்துவக்குழுவில் பங்கேற்கிறார்.

புற‌நோயாளிக‌ளாக‌ வ‌ரும் முதியோர்க‌ளிள் காட்டிராக்ட் என‌ப்ப‌டும் க‌ண் புரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளில் த‌குதியான‌வ‌ர்க‌ளை தேர்ந்தெடுத்து இல‌வ‌ச‌ க‌ண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கிறார்.
தோக‌ம‌லை வ‌ட்டார‌த்தில்

மொத்த ம‌க்க‌ள் தொகை 86404.
மொத்த‌ கிராம‌ம் 90
மொத்த‌ ப்ள்ளிக‌ள் 77

இவ‌ர‌து ப‌ரிந்துரையிப‌டி க‌ண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ண்ட‌வ‌ர்க‌ள், ம‌ற்றும் இல‌வ‌ச‌ க‌ண்ணாடி பெற்றுக்கொண்ட‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் விவ‌ர‌ம் இங்கே.இது பிப்ர‌வ‌ரி 2009 வ‌ரையிலான‌ அள‌வீடு.

14 February 2009

Blindness control society

Guidlines for District Blindness control societyஇங்கே பிடிஃப் வடிவில்


DBCSGUIDE-Sept05