Showing posts with label மருத்துவர்கள். Show all posts
Showing posts with label மருத்துவர்கள். Show all posts

01 March 2012

டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை


 தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 173 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன. இவற்றை முழு அளவில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குனரும், அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி தலைவருமான டாக்டர் கே.செல்வராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் ஏ.சி.மோகன்தாஸ், பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ரத்த சேமிப்பு மையங்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிகளில் இருந்து ரத்தம் கொண்டு செல்லப்படும். அதற்காக, 10 முதல் 15 ரத்த சேமிப்பு மையங்களை, ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கியுடன் இணைத்துள்ளோம். இதை சிறப்பாக முழு அளவில் செயல்படுத்த, இவற்றில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 40 டாக்டர்கள் வீதம் 5 நாட்களுக்கு 200 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதனால், கிராமங்களில் போதுமான ரத்தம் கிடைக்காமல், பெண்கள் பிரசவ நேரத்தில் இறப்பது முழுமையாக தடுக்கப்படும். 

ரத்த சேமிப்பு குறித்து மேலாண்மை பயிற்சி முகாமை டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ் தொடங்கி வைத்து, டாக்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.கரூர் மாவட்டத்தில் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையமும் ரத்த சேமிப்பு மையமாகும்.

09 September 2011

புதிய மருத்துவர்கள்

செப்டம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் உதவி மருத்துவர்களுக்கான  10 a(1) நேர்காணல் சென்னையில் நடந்துள்ளது.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேற்படிப்பிற்கு செனறாதனால் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும்.புதியவர்களை வரவேற்போம்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய இருக்கும் மருத்துவர்களுக்கான சில டிப்ஸ்.


அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.

1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
 உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்

மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.

13 March 2011

மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு

தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளின் முடிவு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.முதல் 999 மதிப்பெண் பெற்றவர்களின் புள்ளி விவரங்கள்.
----------------------------------------------------
அரசுப்பணியில் உள்ளவர்கள் = 386

தனியர் = 613
-----------------------------------------------------
OC = 88 (SER14+PRI 74)

BC = 583 (215+368)

MBC = 228 (101+127)

SC = 70 (48+22)

ST = 1 (1+0)

BCM = 28 (7+21)

SCA = 1 (0+1)
----------------------------------------------------------

15 October 2009

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவிமருத்துவர்களின் பணி நேரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் உதவிமருத்துவர்களின் பணி நேரம் அரசு ஆணை எண் 339 (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)14.10.2009ன் படி குறைக்கப்பட்டுள்ளது .
புதிய வேலை நேரம் மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நி
5 மருத்துவர்கள் பணிபுரியும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று பிரிவான பணிப்பகிர்வு.
1.காலை 8.00 முதல் 2.00 வரை
2.மதியம் 2.00 முதல் 8.00
3.இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 வரை ( தங்கி பணிபுரிதல்) (இதில் காலை முதல் பணிப்பிரிவின் போது பொறுப்பு மருத்துவரும் (இன்சார்ஜ்) ஒரு உதவி மருத்துவரும். ஏனைய பணிப்பிரிவில் ஒரு மருத்துவர்.முந்தைய ஆணையில் இருந்த நிர்வாகப் பணிக்கான காலம் 2.00 முதல் 4.00 வரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் காலை பணிப்பிரிவில் பணிபுரியும் உதவிமருத்துவர் எப்போதும் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற நிலை வரும்.களப்பணி, நிவாகப்பணி,ஆய்வுக்கூட்டங்கள்,பள்ளிகளுக்கு செல்தல், ஏஎன்சி செக்கப் ,தடுப்பூசிப்பணிகள் மேற்பார்வை, போன்ற‌ ஏனைய பொதுசுகாதார பணிகளுக்கான பணிப்பகிர்வு இல்லை.சராசரியாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 க்கும் குறையாத புற நோயாளிகள் வருகை இருக்கும்.மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் இன்சார்ஜ் மருத்துவர்கள் புறநோயாளிகளைப் பார்க்க நேரம் இருக்காது.காலை பணிப்பிரிவில் இன்சார்ஜ் மருத்துவரை சேர்த்து 3 மருத்துவர்கள் பணியில் இருப்பது மட்டுமே பணிப்பளுவை குறைக்கும். எனவே 5 மருத்துவர்களுக்கு மாறாக‌ 6 மருத்துவர்கள்பணியிடம்
உருவாக்கவேண்டும்.)
ஒரு/இரு/மூன்று மருத்துவர்கள் பணிபுரியும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிள்
ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் காலை 9.00 முதல் 4.00 வரை பணி புரிய வேண்டும்.

( உணவு இடைவேளை 1.00 முதல் 1.30)
4.00 முதல் மறுநாள் காலை 9.00 வரை ஒருமருத்துவர் அழப்புப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்
1. பேரிடர்
2. தடுப்பூசி
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்
மேலும் புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது??
(இனி மேம்படுத்தப்பட்ட‌ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்கும்.இப்போதே கூடுதல் ஆ.சு.நி. பணியைத்தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.)


மேலும் விவரங்களுக்கும் ஆனை நகல் பார்ப்பதற்கும்
http://www.payanangal.in/2009/10/blog-post_15.html

29 October 2008

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள்

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாள்ர்கள் ஆகியோரது பணிகள் குறித்த அரசு ஆணைகள் கீழே.