Showing posts with label செவிலியர். Show all posts
Showing posts with label செவிலியர். Show all posts

18 April 2014

தொகுப்பூதிய செவிலியர் ஊதிய உயர்வு - விளக்கம்

தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக இந்த http://www.thogamalaiphc.blogspot.in/2014/02/blog-post_8.html இணைப்பில் தகவல் தெரிவித்திருந்தேன். இந்த ஊதிய உயர்வு அரசு ஆணை எண் G.O.(Ms).No.312 , EAP -II(2) dated 26.12.2013 ல் குறிப்பிடப்பட்டிருந்த வாறு ஒவ்வொரு ஆண்டும் பணி நிரந்தரம் ஆகும் வரையில் வழங்க வேண்டும்.ஆனால் மாதிரிக்காக கொடுக்கப் பட்டிருந்த அட்டவணையில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது.அதனால் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தது.தற்போது மாநில நல்வாழ்வுச் சங்கத்திடமிருந்து கீழ்கண்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

As per the G.O.(Ms).No.312 , EAP -II(2) dated 26.12.2013,(copy attached to the email),  the entry level contractual salary of all the staff nurses have been enhanced to Rs.7700 per month with an annual increase of Rs.500 per month till they are regularised (in the case of staff nurses placed through DMS) or till they move out for better opportunities (in the case of staff nurses placed through outsourcing).
This G.O is applicable to all the contractual staff nurses (including MMU staff nurses) placed under NRHM.
Also it has been learnt from some districts that the annual increase has  been provided only till 4 years after placement.  The annual increase shall be provided till they are regularised i.e for staff nurses in 5th year , 6th year etc also.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் தயக்கமின்றி ஊதிய உயர்வு வழங்கலாம்.

08 February 2014

தொகுப்பூதிய செவிலியர் ஊதிய உயர்வு

RCH தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 01.04.2013 முதல் திருத்தப்பட்ட ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.(Procs.No.2709/SHS/E/2013  Dated.   06.02.14). இதன்படி கீழ்கண்டவாறு ஊதிய நிர்ணயம் இருக்கும். 01.04.2013 முதல் நிலுவை த்தொகை பெற்றுக்கொள்ளலாம்.


22 May 2013

செவிலியர் (ஆர்.சி.எச்) படிகள் விளக்கம்

ஊதிய உயர்வு-குழப்பம்-தீர்வு RCH SCHEME-தகவல் அறியும் சட்டத்தின் கீழ் NRHM DIRECTOR ரிடம் இருந்து பெறபட்ட அதிகார பூர்வ தகவல் 





10 April 2013

செவிலியர் குடியிருப்பு

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.







02 January 2013

NRHM STAFFNURSE PAY ENHANCEMENT

ENHANCEMENT OF CONSOLIDATED PAY TO NRHM STAFF NURSE W.E.F.01.04.2012
G.O.MS.NO.342/ H&FW Dept.dt.14.12.2012.
என்.ஆர்.ஹெச்.எம்.மூலமாக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு மேர்கண்ட அரசு ஆணை மூலமாக ஊதியம் பிரதி மாதம் ரூ3000 உயர்த்தப்பட்டுள்ளது.மூன்றுவருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ2500 உயர்வு.


                             Existing pay            Revised pay

                         pay         allow       Total    pay       allow   toal         Diff
IST YEAR 4000 500 4500 7000 500 7500 3000

2ND YEAR 4500 500 5000 7500 500 7500 3000

3RD YEAR 5500 500 6000 8000 500 8500 2500


01.04.2012  முதல் நிலுவைத்தொகை  பெற்றுக் கொள்ளலாம்.






19 June 2010

செவிலியர் திறன் ஆய்வு மதிப்பீடு

தமிழ்நாட்டில் செவிலியர்களின் நிர்வாகமேலாண்மைதிறன் தொடர்பான ஒர் ஆய்வு மதிப்பீடு இது.இதை படித்து முடித்த போது இது மேசையில் அமர்ந்தவாறு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையாகத் தெரியவில்லை கடினமான களப்பணியின் வெளிப்பாடு இது.சிற்சில தகவல் குறை பாடு இருந்தாலும் இவ்வக்கறை பாராட்டப் படவேண்டியதே.
Assessment of Nursing Management capacity in Tamilnadu.
Tamil Nadu Report

23 May 2010

செவிலியர் சீருடைப்படி ( Staff Nurse uniform )

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்று செவிலியர் என செவிலியர்கள் பணியமர்த்தப்ப்ட்டுள்ளனர்.இதில் பெரும்பான்மையோர் NRHM,RCH மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.மாதச் சம்பளம் 3500, ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு 4000,ஈராண்டு பணிமுடித்தவர்களுக்கு 5000, என ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த காலங்களில் இவர்களுக்கு மேற்கண்ட தொகைகளைத்தவிர ஒரு பிரசவத்திற்கு ரூ.25/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பணிநிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஒரு வருடத்திற்கு சீருடைபடியாக ரூ.1800/- வழங்கப்பட்டு வருகிறது.சலவைப்படியாக மாதம்தோறும் ரூ.60 வழங்கப்படுகிறது.ஆனால் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சீருடைப்ப்டி வழங்கப்ப்டவில்லை.சலவைப்படியும் இல்லை.மேலும் Mobile Medical Unit ல் பணியாற்றும் செவிலியர்கள் தினமும் கிராமங்களுக்குச் செல்வதால் சீருடை பராமரிப்பு என்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. எனவே NRHM , RCH லிருந்து அவர்களுக்கு சீருடைப்படிவருடத்திற்கு ரூ.1800ம் சலவைப்படி பிரதிமாதம் ரூ60/ம், வழங்கினால் தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.தொகுப்பூதியம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கிடையே ஊதிய வேறுபாடு ஏற்க்கக் கூடியதே, ஆனால் சீருடை அப்படியல்ல.நிர்வாகத்தின் பார்வைக்கு இதனை கொண்டு செல்வது நமது கடமை.