PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
30 June 2013
11 December 2012
இயக்குனர்,திட்ட இயக்குனர்,வருகை
அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை இயக்குனர் திரு.பொற்கைப்பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார்.
இயக்குனர் பிரசவமான ஒரு தாய்க்கு ஜேஎஸ் ஒய் காசோலை வழங்குகிறார் அருகில் உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்கள்
இயக்குனர் அவர்கள் பிறந்த குழந்தையினை பார்வையிடுகிறார் அருகில் துணைஇயக்குனர் திரு.சம்பத்குமார் அவர்கள்
01 September 2010
உணவுக் கலப்படத் தடைச்சட்டம்
கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.
இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மஞ்சள் தூளுக்கு ரேஷன் கடையில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசியை மாவு போல பவுடராக்கி, அதனுடன், "லெட் குரோமேட்' என்ற துத்தநாக ரசாயனத்தை கலப்படம்
செய்கின்றனர்
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் சில்கி, இன்னொன்று செகண்ட்ஸ். இந்த சில்கி தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும். கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த செகண்ட்ஸைதான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியொரு ரூபத்தில்
அங்கே காத்துக் கொண்டிருக்கும்
கூட்டு பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கபடுகின்றன. குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதை பொருட்களும் கலக்கபடுகின்றன
பி.கு( டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம்
2.நன்றாக பொடியாக்கபட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி)
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது
நன்றி http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_7706.html
http://foodsafetynews.wordpress.com/
http://www.mohfw.nic.in/pfa.htm
http://www.pfndai.com/Gazette%20pdfs/GSR44E22-01-09DraftPFAamend_SampleAmtForAnalysis.pdf
http://www.mohfw.nic.in/pfa%20acts%20and%20rules.pdf
1.09.2010 குமுதத்தில் இயக்குனரின் பேட்டி
14 November 2008
பொது சுகாதாரத் துறை இயக்குனர்
முதலில் சந்தித்தது திண்டுக்கல்லில். கரூர் மாவட்டத்தில் என்னுடன் பணி புரிந்த திரு.ராமனாதன் உதவியாளர் அவர்களின் திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்த போது .அப்போது அவர் திண்டுக்கல் துணை இயக்குனர்.
இரண்டாவது, திருச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்.அப்போதய தலைமை கணக்கு அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் திரு.நாராயணன் அவர்களின் வகுப்பும் இருந்தது.அவருக்கு பவர் பாய்ண்ட் உதவிக்கு இயக்குனரக உதவியாளரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.ராஜனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன்.அப்பொது தான் திரு.ஜி.ஆர்.ரவீந்திரநாத்,நாரண்ம்மா தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வர் திரு.அறம்.,காதுகள் நாவல் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் பேத்தி மரு.ஏ.ஆர்.சாந்தி ,ஆகியோரை பார்த்தேன். தற்காலிக பணியாளர்களாக இருந்த போதே நிவாகம், துறை பணிகள் போன்றவைகளிள் அவர்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு ஆச்சிரியப்பட்டேன்.(இது தொடர்பாக தனி பதிவு எழுதவேண்டும்).சரி விஷயத்திற்கு வருகிறேன்,
அந்த பட்டறைக்கு ஒரு சிலைடு ஷோவுடன் துறை தொடர்பான நீண்ட வகுப்பு எடுத்தார்.அவரது பேச்சை அரங்கில் இருந்த அனைவரும் மிக அமைதியாகவும்,கவனமாகவும் வுள்வாங்கிய அந்நிகழ்வு இன்றும் என் நினைவில் உள்ளது.அவரது பேச்சாற்றலை நான் எதிர் பார்க்கவில்லை.திருநெல்வெலி துவங்கி,சமூகநீதி,மாணவர் சக்தி,என சுவாரசியமான பல விஷயங்கள் இடைஇடையே.இறுதியில் கேள்விநேரம்.சளைக்காத கேள்வி,சளைக்காத பதில்.ஒரு அதிகாரியாக பார்த்தது போய் ஒரு ஆளுமையுள்ள பேச்சாளராக அங்கு பார்த்தேன்.
3 வது சென்னையில் திரு.அரங்கஅனந்த கிருட்டிணன் அவர்களுடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் அனைவரும் அவரது அலுவலகத்தில் அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.எந்த கோரிக்க்கைகளும் இல்லாத ஒரு சாதாரண சந்திப்புதான்.வந்த அனைவருக்கும் இருக்கைகள் தந்து உட்காரச்சொன்னார்.அமைச்சுப்பணியாளர்களை உட்காரவைத்துப் பேசிய அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.கோரிக்கைகள், பணிகள்,இவைகளையெல்லாம் தாண்டி நச் சென்று அவர் சொன்ன ஒரு சங்கதி
1. உங்களது ஒவ்வொரு கூட்டத்திலும் துவங்குமுன் ஒரு மணி நேரம் உஙகளை நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இன்று நாம் வேலைக்கு வந்து எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளோம்,எத்தனை கோப்புகளை எடுத்து பணி செய்துள்ளோம். என்பது மதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.சங்கம், கோரிக்கைகள் அத்ற்கான போராட்டஙள் அனத்தும் தேவைதான்
கூடவே சுயபரிசோதனையும் தேவை.
4 வது சந்திப்பு அவர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றபின்.இயக்குனர் அறையில். சம்பிரதாய சந்திப்பு
5 வது சந்திப்பு தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் அவர்களுடன்.இயக்குனர் அறையில் அவர் எதிரே உயர்நிலை அலுவலர்கள் பலர்.இடயிடயே தம்பி சீனு (பி சி) அவசர செய்திகளை தொடர்பு கொள்ள தொலைபேசியுடன்.மிகுந்த பரபரப்பான சூழல்.அந்த சூழலிலும் கிடைத்த சிறிது நேரத்தில் கோரிக்கை படிவத்தினை கொடுத்தார் தோழர். கோரிக்கை ஒரு சிறு புத்தகம் போல இருந்தது.(அனைத்தும் அரங்க அனந்த கிருட்டிணன் அவர்கள் உழைப்பு) அப்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகள் இவர் சாதிப்பதற்காக வந்துள்ளார் என்பதை உணர்த்தியது.
உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக 3 கட்டம் போட்டு தெரிவியுங்கள்.
1.கோரிக்கை சுறுக்கமாக.
2.எங்கு நிலுவை?
3.என்ன செய்தால் தீர்வுகிட்டும்?
இவைகளுடன் முதலில் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடனான முதல் கட்ட பேச்சு நடத்துங்கள் அடுத்து
அதன் பிறகு அவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.இதற்கிடையில் தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் மற்றும் நிவாகிகள் இயக்குனர் அருகில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.இயக்குனர் சிரித்துக்கொண்டே கண்ணாடியை நாசி நுனிக்கு இறக்கி மேல் பக்கமாக பார்த்து புகைப்படம் எடுத்தவரை பர்ர்த்து கேட்டார்." என் அறையில் என்னை புகைப்படம் எடுக்க என்னிடம் அனுமதி பெறவேண்டாமா?"
தவறை உணர்ந்து உடன் மன்னிப்பு கோரினார் நண்பர்.பேசி முடித்த பிறகு விடைபெற்றோம். அப்போது தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் இயக்குனரிடம் கேட்டார் "எங்கள் மாநில நிர்வாகிகள் உங்களுடன் ஒரு புகைப்பட்ம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா அய்யா?" "ஓ.எஸ்".என்ற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாநில நிர்வாகிகள்







