PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
Showing posts with label பணிஓய்வு. Show all posts
Showing posts with label பணிஓய்வு. Show all posts
29 July 2014
30 June 2013
15 January 2013
திரு.மனோகரன் என்.எம்.எஸ் பணிஓய்வு
பணி ஓய்வு திரு மனோகரன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் (Manoharan NMS) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 31.12.2012 அன்று தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பணிஓய்வு பெற்றார்.இனிய நண்பர்.பணி அல்லாது ஏனைய உறவுகளையும் நன்கு பேணி காப்பவர்.எங்களுக்கு அவர் ஒரு குட்டி விக்கிபீடியா,கூகிள் சர்ச் இஞ்சின், என கூறலாம்.சிமெண்ட் வாங்குவது முதல் சிம்கார்டு மாற்றுவது வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம்.தெரிந்துவைத்திருப்பார் அல்லது எங்கு தொடர்பு கொண்டால் தெரியும் என சொல்லுவார்.பண்பாளர்.வயதுக்கு மீறிய பணிவு கொண்டவர்.ஓய்வு பெறும் மாதம் கூட டெங்கு களப்பணியினை சிறப்பாகச் செய்தவர்.அதிகாரிகளுக்கு இணக்கமானவர்.நம்பி பல காரியங்களை மருத்துவ அலுவலர்கள் இவரிடம் ஒப்படைப்பார்கள்.அதிர்ந்து பேசாதவர்.நம் தவறுகளைக் கூட மென்மையாக சுட்டிக் காட்டுபவர்.நெகிழ்வுத்தன்மை கொண்டவர்.யாருடனும் ஒத்துப் போய்விடுவார்.
நான்,கண்மருத்துவ உதவியாளர் செல்வமோகன்குமார் இவர் ஆகிய மூவரும் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒன்றாக கலந்து கொள்ளுவோம்.அப்படி பழனி,ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு இவருடன் சென்றுள்ளேன்.நல்ல இணை.வயது வித்தியாசம் தெரியாது.ஒன்றிவிடுவார்.நல்ல குடும்பம்.ஒரு மகன் ஒரு மகள்.இவ்வளவுகாலம் ஒரு நபர் அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு பின்னே அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.வேலைக்கு செல்லும் நாட்களில் கையில் சாப்படு கட்டிக் கொடுப்பது முதல் சரியான நேரத்தில் பஸ்பிடிப்பதுவரை துணைவியின் துணையின்றி ஆகாது.நானும் மோகனும் இவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதிய உணவு ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்.இவரது வீட்டு உணவு சாத்வீகமாகவும் சுவையாகவும் இருக்கும்.உணவு குணத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி என்பது இவர் உணவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.மொத்தமாக இவரது பணிஓய்வு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு.நல்ல நண்பர்,நல்ல ஊழியர்,நல்லகணவர்,நல்ல தகப்பன்,நல்ல தாத்தா?..என பல பரிமாணங்களிலும் கிரேடு எடுத்தவர்.இவரைபற்றி நினைக்கும் போது மகாகவி பாரதியின் கண்ணன் என் சேவகன் பாடல் எனக்கு நினைவுக்கு வரும்.
“நண்பனாய்,மந்திரியாய்,நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்.
எங்கிருந்தோ வந்தான்..இடைச்சாதி என்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.
ஆம் எங்கள் நண்பரை,மந்திரியை,நல்லாசிரியரை….நாங்கள் மிஸ் பண்னுகிறோம்.
15 June 2012
திருமதி.ஆர்.ஜெயலட்சுமி பணி ஓய்வு
தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சேப்ளாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சிறப்புநிலை கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரிந்து 30.04.2012 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்ற திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களுக்கு தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்றார்.மரு.மணிமேகலை,மரு.நிருபா,மரு.சுதாகர் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களின் குடும்பத்தினரும் விழாவில் கல்ந்து கொண்டனர்.முன்னதாக திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்கள் நல்லதொரு சைவ விருந்து படைத்தார்.விழாவிற்கு பிறகு உரிய மரியாதைகளுடன் அவரது இல்லத்திற்கு அரசு வாகனத்தில் கொண்டு விட்டு வந்தோம்.
இவரது பணிக்காலத்திற்குள் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்கிற இவரது கனவு கனவாகவே போய்விட்டது தான் வருத்தமான ஒன்று.மாநில அளவில் நிறைய பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் இவ்வாறு ஒரே பதவியில் இறுதி வரை பணியாற்றி ஓய்வு பெறும் அவலம் இனியும் தொடராமல் இருக்க வேண்டும்.

விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்றார்.மரு.மணிமேகலை,மரு.நிருபா,மரு.சுதாகர் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களின் குடும்பத்தினரும் விழாவில் கல்ந்து கொண்டனர்.முன்னதாக திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்கள் நல்லதொரு சைவ விருந்து படைத்தார்.விழாவிற்கு பிறகு உரிய மரியாதைகளுடன் அவரது இல்லத்திற்கு அரசு வாகனத்தில் கொண்டு விட்டு வந்தோம்.
இவரது பணிக்காலத்திற்குள் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்கிற இவரது கனவு கனவாகவே போய்விட்டது தான் வருத்தமான ஒன்று.மாநில அளவில் நிறைய பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் இவ்வாறு ஒரே பதவியில் இறுதி வரை பணியாற்றி ஓய்வு பெறும் அவலம் இனியும் தொடராமல் இருக்க வேண்டும்.
திருமதி.ஆர்.ஜெயலட்சுமி
மரு.நிருபா அவர்கள் சந்தன மாலை அணிவித்தார்
மரு.மணிமேகலை அவர்கள் பொன்னாடை போர்த்தினார்
வட்டார மருத்துவ அலுவலர் மரு.சாபிரபாகரன் மற்றும் சேப்ளாபட்டி ஆ.சு.நி. மருத்துவ அலுவலர் திரு.சுதாகர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
தோழிகளுடன்
மரு.சுதாகர் அவர்களின் வாழ்த்துரை
டி.கிறிஸ்டி கி.சு.செ அவர்கள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்
விழாவில் கலந்து கொண்டோர்
கண்மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோககுமாருடன்
கண்காணிப்பாளர்.சே.வேங்கடசுரமணியன் நன்றியுரை
மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.மனோகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.முத்தையனுடன்.
14 December 2011
பணிஓய்வு
சாதாரணமாக துறையில் “சிஸ்டர்” என்ற பதம் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும்.உண்மையில் அதன் பொருள் பூரணமாக இவருக்குப் பொருந்தும்.ஒரு சின்ன உதாரணமாக உடன் பணியாற்றும் ஒரு சக ஊழியரின் பெண் திருமணம்.அவருக்கு நிதி தட்டுப்பாடு.வட்டிக்காவது ஒரு லட்சரூபாய் பணம் கிடைத்தால் பரவாயில்லை என்கிற நிலையில் அதைப்பற்றி பங்கஜவள்ளி சிஸ்டருடன் பகிர்ந்து கொள்கிறார். உடனடியாக தனது கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை கழற்றிக் கொடுத்து என்னிடம் இப்போது பணமில்லை இதை வைத்து திருமணத்தை நடத்துங்கள் உங்களுக்\கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது மீட்டுத்தாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் என்ன சிறப்பு எனில் இந்த விவரம் ஆரம்ப சுகாதார நிலைத்தில் யாருக்கும் தெரியாது.இவரது பிரிவு உபசார விழாவில் பயனடைந்த சகோதரி தனது கண்ணீருக்கு இடையே இந்த சம்பவத்தை கூறியபோது தான் மற்றவர்களுக்கே தெரியும்.
இவருடன் இவர் காலத்தில் பணியாற்றிய நினைவுகள் என்றும் மனதில் இருக்கும்.
27 October 2010
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி ஓய்வு



வயதில் தான் இவர் பெரியவர் பணியில் இளைஞர் தான்.ஓய்வு பெறும் வயதில் கூட சுறுசுறுப்பும் பொறுப்புணர்வும் கொண்டு பணிபுரிந்தவர்.இவரது பெருமைகளை அனைவரும் பேசினர்.இவரது மனைவியும் இவருடன் கவுரவிக்கப்பட்டார்கள். திரு.இ.ராஜலிங்கம் அவர்கள்அனைவருக்கும் சிறப்பான விருந்து படைத்தார்.பிறகு அலுவலக சகோதர சகோதரிகள் படை சூழ அவரது சொந்த ஊரான தரகம்பட்டிக்கு அவரை கொண்டுவிட்டு பிரியாவிடைபெற்றுத் திரும்பினோம்.
Subscribe to:
Comments (Atom)




















