Showing posts with label பிரிவு உபசாரவிழா. Show all posts
Showing posts with label பிரிவு உபசாரவிழா. Show all posts

29 July 2014

Nirmaladevi Superintndent Retirement 30.06.2014

Veeramachanpatty PHC, Trichy District, Smt,Nirmaladevi Superintndent Retirement 30.06.2014 Function Photos







10 April 2013

பரமசிவம் என்றொரு நடமாடும் ஆவணக்காப்பகம்

கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து 28.02.2013 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ளார் திரு.பரமசிவம் அவர்கள்.நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பல வேலைகளை எளிமையாகவும், புரியும்படியும், சொல்லிக் கொடுத்த குரு.துறை சம்மந்தப்பட்ட எந்த ஒரு ஆணை பற்றி கேட்டாலும் ”ரெடி ரெக்கனராக” பதில் சொல்லுவார்.நிதானமும்,ஒழுக்கமும் ஒருங்கே அமயப்பெற்றவர்.இவருக்கு அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடத்தப் பட்டது.


திருமதி சுதா கண்காணிப்பாளர் ஆ.சு.நி.மலைக்கோவிலூர் அவர்கள் உரை


திரு.காந்தி இ.நி.உஅ அவர்கள் வாழ்த்து


திரு.பா.சுரேஷ் கண்காணிப்பாளர் து.இ. அலுவலகம் கரூர்.அவர்கள் உரை


நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தல்





திரு.ராஜலிங்கம் கண்காணிப்பாளர். து.இ.சு.ப.கரூர் நினைவுப் பரிசு வழங்குகிறார்.



நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை.

31 December 2012

ஆர்.பொன்மேனி கிராம சுகாதார செவிலியர்

தாமதமான பதிவு. புகைப்படங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாம்தம் காரணம்.தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் உள்ள சேப்ப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலைய்த்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து 30.09.2012 அன்று பணி ஓய்வு பெற்ற திருமதி.ஆர்.பொன்மேனி அவர்களுக்கு 30.09.2012 அன்று பிரிவு உபசார விழா தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.அவரின் பணித்திறமை மற்றும் நேர்த்தி பற்றி அனைவரும் பேசினர்.இறுதியில் ஏற்புரையாக பேசிய திருமதி.ஆர்.பொன்மேனி அவர்கள் தனது வெற்றிக்கான காரணங்களை விளக்கிப் பேசினார்.நான் எங்கு பணிபுரிந்தாலும் அவ்வூர் மக்களுடன் இரண்டரக் கலந்து விடுவேன்.எல்லோர் வீட்டு நல்லது கெட்டதுகளும் எனக்குத் தெரியும்.ஒவ்வொரு வீட்டுப் பெண்களையும் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பரிச்சயம் செய்துகொள்வேன் என கூறினார்.















31 March 2011

பிரிவு உபசார விழா


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31.03.2011 அன்று வயது முதிர்வின் காரணமாக திருமதி . ஜே. தமிழரசி FNA மற்றும் திருமதி.ஜி.லலிதா SHN அவர்களும் பணி ஓய்வு பெற்றனர்.பிரிவு உபசார விழாவிலிருந்து சில காட்சிகள்.





திருமதி. ஜே.தமிழரசி அவர்களுக்கு நினைவுப்பரிசினை முதன்மை குடிமை மருத்துவர் திரு.கே.குமாரசாமி அவர்கள் வழங்குகிறார்.




Tmt.j.Tamilarasi withT.Lakshmi Staff Nurse, Selvarani Staff Nurse, jayasudha ANM, malarkodi VHN, malliga VHN,Shanthi Staff Nurse


திருமதி.ஜி.லலிதா SHN அவர்களுக்குமரு.நர்மதா அவர்கள் நினைவுப்பரிசு வழங்குகிறார்,




பிரிவாற்றாமை




G.Lalitha SHN, J.Tamilarasi FNA, Dr.k.Visalakshi Senior Civil Surgeon (Rtd),Dr.K.Kumarasamy Chief Civil Surgeon,Dr.Sudhahar,Dr.K.Sowmiya,S.Venkatasubramaniyan Superintendent

27 October 2010

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி ஓய்வு









தோகமலை சமுதாய நல நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி 30.09.2010 அன்று வயது முதிர்வின்காரணமாக பணி ஓய்வு பெற்ற பெரியவர் திரு.இ.ராஜலிங்கம் அவர்களுக்கு தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. வட்டார அளவில் அணைத்து ம்ருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வயதில் தான் இவர் பெரியவர் பணியில் இளைஞர் தான்.ஓய்வு பெறும் வயதில் கூட சுறுசுறுப்பும் பொறுப்புணர்வும் கொண்டு பணிபுரிந்தவர்.இவரது பெருமைகளை அனைவரும் பேசினர்.இவரது மனைவியும் இவருடன் கவுரவிக்கப்பட்டார்கள். திரு.இ.ராஜலிங்கம் அவர்கள்அனைவருக்கும் சிறப்பான விருந்து படைத்தார்.பிறகு அலுவலக சகோதர சகோதரிகள் படை சூழ அவரது சொந்த ஊரான தரகம்பட்டிக்கு அவரை கொண்டுவிட்டு பிரியாவிடைபெற்றுத் திரும்பினோம்.

02 August 2009

மாறுதலாகிச்சென்ற மாணிக்கங்கள்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு வகித்துவந்த மரு.பி.பாரதிராஜா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகிச் சென்றுள்ளார்.மருத்துவமில்லா மேற்பார்வையாளர் திரு.என்.ஜெயராமன் அவர்களும் திருச்சி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகி சென்றுள்ளார். மரு.பாரதிராஜா அவர்கள் 01.07.2006 அன்று தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக பணியில் சேர்ந்தர்.30.06.2009 அன்று மாறுதல் ஆகி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம். திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர். இவர்கள் இருவரும் மாறுதலாகிச்செல்வது இழப்புதான் என்றாலும் இவர்களது அனுபவங்களை உள்வாங்கி ஆரம்பசுகாதார நிலையப்பணிகளை இவர்களது மானசீக ஆசிகள் மற்றும் ஆதரவுடன் தொடர்வோம். பிரிவு உபசாரவிழா புகைப்படங்கள்.
மரு.பி.பாரதிராஜா பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம்.
திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர்