Showing posts with label டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம். Show all posts
Showing posts with label டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம். Show all posts

18 April 2013

மென்பொருள் உதவித்துளி

நேற்று முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் 2011-12 மற்றும் 2012-13 ல் பயனடந்த பயனாளர்கள் விவரங்களை தமிழ் வானவில் அவ்வையார் எழுத்துருவில் அடிக்த்து சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார்கள்.எனக்கோ வானவில் எழுத்துரு படி டைப் அடிக்கத்தெரியாது.நான் பொனடிக் முறைப்படி என்.எச்.எம் ரைட்டர் மூலம் தமிழ் தட்டச்சு செய்யும் ஒருவிரல் கிருஷ்ணாராவ்.ஜாப்டைப்பிங்க் செய்பவர்களை அனுகியபோது டிடிபி ஃபாண்ட் களில் அடித்துத் தருகிறோம் வானவில்லில் அடிக்க முடியாது என சொல்லிவிட்டார்கள்.இயக்குனரக நண்பர் வந்தியத்தேவன் அவரகளிடம் தொடர்பு கொண்டு ஏதேனும் குறுக்கு வழி இருக்கிறதா என கேட்டேன்.அவரோ திரு.நம்பி அவர்களை இதுதொடர்பாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டபோது என்.எச்.எம் ரைட்டரில் ஆல்ட் 3 அடித்து ஓல்டு டைப்ரைட்டர் மோடில் அடிக்கும் படி கூறினார்.எனக்குத்தான் தமிழ் டைப் தெரியாதே.ஆன்லைனில் ஃபான்ட் கன்வெர்ட்டர்,டிரான்ஸ்லேட்டர் என இரண்டு மணி நேரத்தை வீணடித்தும் பலன் இல்லை.திரு.நம்பி அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டபோது என்.எச்.எம் ரைட்டர் செட்டிங்ஸ் சென்று வானவில் பொனட்டிக் தேர்ந்தெடுத்து அடியுங்கள் உங்கள் முறைப்படி அடிக்கலாம் என்றார்.அப்பாடா என்று இருந்தது.ஒருவழியாக இரவு பகலாக அடிக்கத்துவங்கி இன்று மாலை 4.00 மணிக்கு முடித்து துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பினேன்.பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி மாற்றி க்கான ஒரு வலைப்பக்கம் கணக்கிடைத்தது (திருமதி மலர் அவர்கள் உபயம்).இருப்பதிலேயே ஓரளவுக்கு தப்பில்லாமல் இந்தப்பக்கம் மட்டுமே மொழிமாற்றம் செய்கிறது.லிங்க் இங்கே http://tamil.changathi.com/.

06 March 2013

மென்பொருள் உதவித்துளிகள்

முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட மென்பொருள் ஆக்கத்தில் கீழ்கண்ட பயன்பாடுகளை எளிமையாக்கினால் பயன் படுத்துபவர்களுக்கும் பணி துரிதமாக நடைபெறவும் பயனுள்ளதாக இருக்கும்.

அ)       தற்போது 9.0 மென்பொருளின் படி ஒரு செயல்முறைகளுக்கு ( proceedings) ஒரு பட்டியல் என கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு செயல்முறைக்கு ஒரு ஈசிஎஸ் மட்டுமெ ஜெனரேட் ஆகிறது.
   இதையே சற்று மாற்றி ஒரு உதாரணத்திற்கு ( proreeding 55 to 60 )  என ஈசிஎஸ் ஜெனரேட் செய்யயும் வசதியினை ஏற்படுத்தலாம்.அதற்கான செயல்முறைகள் வாரியான  பொழிப்பும் ( ABSTRACT)  கிடைக்க வழியேற்படுத்தலாம்.
இதனால் தினந்தோறும் ப்ரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்தாலும் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்காது.ஒருமுறை MTC 70  கருவூலம் சென்றால் திரும்பி வர குறைந்தது 4 நாட்களாவது ஆகும்.அதுவரை புரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்யாமல் இருக்கவேண்டியதில்லை.

ஆ) proceedings submission details entry தற்போது user friendly ஆக இல்லை.காரணம் ஒவ்வொரு proceedings க்கும் தனித்தனியாக விண்டோவருவது காலதாமதமாகிறது.அப்ளிகேஷன் ஃபார்வேர்டுச் செய்வது போல ஒரே பக்கத்தில் அனைத்து பதிவுகளும் வந்தால் எளிதாக இருக்கும். 
   பதிவு செய்யப்பட்ட proceeding பதிவுகளை ஒரு முறை பதிவு செய்து விட்டால் ஆக்டிவேட் ஆகாமல் இருப்பதில்லை.மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்யமுடிவதும் எவ்வளவு பதிவு செய்துள்ளோம் என பதிவு செய்பவர்கள் அறிவதும் சிரமமாக உள்ளது.

இ) print proceedings,ECS, ஆகிய பக்கங்களில் எத்தையாவது தவனை என்பதும் வரவழைப்பது பயனுள்ளதாக இருக்கும்.


22 November 2012

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்ட பிரச்சினைகள்


முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் இந்த வருடம் 2012-13 செப்டம்பர் வரை பயனாளர்கள்  அனைவருக்கும் தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ரூ.46,72,000  தொகைகள் வங்கிகள் மூலமாக அவர்களது கணக்கில் வரவு வைக்கப் பட்டுவிட்டன.ஆன் லைனில் ஏற்றப்பட்ட வங்கி கணக்கு எண்களின் தவறுகளின் காரணமாக அனுப்பப்பட்ட தொகைகள் திரும்ப மருத்துவ அலுவலர்களின் கணக்கிற்கே வருவது தொடர்க்கதையாக இருந்தது.20.11.2012 உடன் மிகுந்த சிரமத்திற்கிடையில் சரியான கணக்கு எண்களை கண்டுபிடித்து தொகை அனுப்பப்பட்டு விட்டது,

         தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இத்திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பை வழங்காதது வருந்தத்தக்கது.
        கணக்கு எண் சரியில்லை என திருப்பி அனுப்பும் தொகைகளுக்கான விவரங்களை சரியாக அனுப்பாததனால் மட்டுமே மருத்துவ அலுவலரின் கணக்கிலிருந்து பயனாளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகாத நிலை, பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளது.
      திரும்பிய பணம் யாருடையது? என கண்டுபிடித்து அந்த மனுவிற்குரிய சரியான கணக்கு எண்ணை தருமாறு கிராம சுகாதார செவிலியரிடம் picme எண்னுடன் கோரினால் மட்டுமே சரியான கணக்கு எண்களை பெறமுடியும்.
          மேலும் மனுக்களை ஆன் லைனில் ஏற்றும் பணிக்கென்று தனியாக டேட்டா எண்டிரி ஆப்ரேட்டர்கள் நியகிக்கப் ப்டாத்தால் பல இடங்களில் அவுட் சோர்சிங் முறையில் வெளியாட்களை கொண்டு டேட்டாக்கள் பதிவு செய்யப் படுகின்றன.
                                            பதிவு செய்யப்பட்ட மனுக்களின் விவரங்களை ஆய்வுசெய்வதுமில்லை.50 வயதுக்கு மேலானவர்களே பெரும்பாலும் பகுதி சுகாதார செவிலியர்களாக உள்ளனர்.அவர்களுக்கு கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாததால் அவர்களால் ஆய்வு செய்ய முடிவதில்லை.
                                          இந்நிலையில் ஏனோ தானோ வென்று ஏற்றப்பட்ட கணக்கு எண்கள் தப்பாக வங்கிக்கு செல்லும் போது அவைகள் திருப்பி அனுப்பப் படுகிறன.அவ்வாறு திருப்பி அனுப்பும் போது மருத்துவ அலுவலர் அளித்த இசிஎஸ் படி முழு விவரங்களுடன் திருப்பி அனுப்பப் படுவதில்லை..
இதனால் திரும்பிய பயனாளர்கள் யார் என கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
இதில் பாதிக்கப் படுவது அமைச்சுப் பணியாளர்களூம்,பயனாளர்களும் தான்.
ஏன் இவ்வளவுத் தொகை மருத்துவ அலுவலரின் கணக்கில் இருக்கிறது என உயர் அதிகாரிகள் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் பல இடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் திணறுகிறார்கள்.பயனாளர்களும், குழந்தையே பிறந்துவிட்டது இன்னும் பணம் வரவில்லை என வருத்தத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது.
1.அரசு பணம் கொடுத்துவிட்டது
2.அமைச்சுப் பணியாளர்கள் பட்டியல் தயாரித்து பணமாக்கி விட்டார்கள்
3.வங்கிக்கு இசிஎஸ் அனுப்பியாகி விட்டது.
இதுவரை சரியாக செல்கிறது.
1.வங்கியிலிருந்து உடனடியாக லிஸ்ட் வருவதில்லை.
2.வங்கியில் மொத்தமாக மட்டுமெ பணம் கழிக்கப் படுகிறது.
3. உதாரணமாக ரூ.15,00,000 இலட்சம் வங்கிக்கு .சிஎஸ் மூலம் அனுப்பப் பட்டால் ஒரே நாளில் 12,00,000 இருப்பில் கழிக்கப் படுகிறது(Debit).யார்யார் கணக்கில் வரவு வைக்கப் பட்டது என்பதற்கான பட்டியலை தேசிய வங்கிகள் தருவதில்ல,
4.வேறு ஒரு நாளில் ரூ.3,00,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது இது யார் பணம் என கேட்டால் அதற்கான முழு விவரங்களையும் வங்கி தருவதில்லை.”இதெல்லாம் கணக்கு எண் தப்பு அதனால் திரும்பிடுச்சு என வங்கி தெரிவிக்கிறது..
5.ரொம்ப வற்புறுத்தி கேட்டால் நேம் லிஸ்ட் மட்டும் தருவார்கள் அதில் உதாரணமாகபோதும்பொண்ணு 4,000 என இருக்கும் அதே பெயரில் 40 பேர் இருப்பார்கள் இது யாருடையது அவர்கள் picme எண் என்ன? என கண்டறிவது பிரம்மப் பிரயத்தனம்.


12 April 2012

நக்கீரா நன்றாக எம்மைப் பாரும்.

மகப்பேறு திட்டம் 400 கோடி முடக்கம் என்ற தலைப்பில் நக்கீரன் ஏப் 11-13 ல் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.இந்தக்கட்டுரை தொடர்பாக சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.ஒட்டு ,மொத்தமாக இத்திட்டத்தினை குறை கூறுவது மட்டுமே செய்தியாளரின் நோக்கமாக தெரிகிறது.

1.இத்திட்டம் மூலம் தொகை முழுதும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பயனாளருக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2.கர்ப்பமான நான்காவது மாதம் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்வது அவசியம்.அவ்வாறு பதிவு செய்யாமல் பிரசவ நேரத்தில் வந்து உதவித்தொகை கேட்பவர்க்கு இத்தொகை வழங்க இயலாது.(தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் தொடர்பாகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.)

3.கிராமப்புறங்களில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொகை பயனாளர் கணக்குக்கு நேரடியாக ஈ.சி.எஸ் முறையில் பணம் வரவு வைக்கப் படுகிறது.

4.செக்காகவோ,பணமாகவோ வழங்கப்படும் போது கையூட்டலுக்கு காரணமாக அமையும் என்பதாலேயே வங்கி கணக்கு துவங்க வற்புறுத்தப்படுகிறது.

5. நக்கீரன் குறிப்பிடுவது போல 500 டெபாசிட் எந்த வங்கியும் கேட்பதில்லை.அந்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 0 கணக்கு துவங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளனர்.

6 நக்கீரன் குறிப்பிடுவது போல்.விண்ணப்பத்தில் 206 கேள்விகள் கேட்கப் படுவதில்லை( மாதிரி விண்ணப்படிவம் பார்க்க).விண்ணப்பம் மிக எளிமையானது, பயனாளர் தொடர்பான விவரங்களை கிராம சுகாதார செவிலியர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதுதான்(picme) அனைத்து விவரங்களும் ஏற்றப்பட வேண்டும்.இவ்விவரங்கள் அனைத்தும் கிராம சுகாதார செவிலியர் வசம் எப்போதும் இருக்கும்.இது தொடர்பான விரிவான பயிற்சிகள் ( பயிற்சி  காட்சி) புரஜக்டர் மூலம் எளிமையாகவும் விரிவாகவும்  அளிக்கப் பட்டுள்ளது.

7.ஜாதி, படிப்பு,பிளட் டெஸ்ட்,எச்.ஐ.வி, டெஸ்ட், தடுப்பூசி,உடல் எடை,ஸ்கேன், இதையெல்லாம் ”அப்புடி...இப்புடின்னு ஒரு 206 கேள்வி “ என குறிப்பிடுவது  எவ்வளவு அறியாமை.? இதெல்லாம் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு கிடைக்கிறதே என நக்கீரன் மகிழ்ச்சியடைய வேண்டாமா?

8.கம்ப்யூட்டர் பணிக்கு டேட்டா எண்டிரி ஆப்பரேட்டர் பணியமர்த்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இடைக்கால மாக ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000 வீதம் ”அவுட்ஸோர்ஸில் “ ஆன் லைன் வேலைகள் செய்ய ஒரு நபரை வட்டார அளவிலேயே மருத்துவ அக்லுவலர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து அதற்கான தொகை டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரயிலான காலங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ20,000/- வழங்கியுள்ளது.(மொத்தம் 385 x 20000  = 77,00,000).

9.மொத்தத்தில் தாமதம் என்பது ஏதுமில்லை.அப்படி இருந்தாலும் வங்கி கணக்கு துவங்குவது மாதிரியான பயனாளர்களின் பாதுகாப்பு கருதியே இத்தாமதம் ஏற்படுகிறது.

10. ஒட்டு மொத்தத்தில் ஒரு நல்ல திட்டம் மிக நல்ல நிலையில் மக்களை சென்றடையும் வேளையில் முழுமையான தகவல் அறியாமல் இதிலும் அரசியல் பார்ப்பது வருந்தத்தக்கது.

மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் “ நக்கீரா நன்றாக எம்மை பாரும்”

15 March 2012

யார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி?


13.03.2012 அன்று மைலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தினை கரூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திரு.சம்பத்குமார் அவர்கள் நடத்தினார்.அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன்.கூட்டம் முடிந்து சாவகாசமாய் மரத்தடியில் பேருந்துக்காக காத்திருந்த போது கிராம சுகாதார் செவிலியர்,சமூக சுகாதார செவிலியர்,பகுதி சுகாதார செவிலியர் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்த போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி பேச்சு திரும்பியது.அப்போது டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி பற்றி நானறிந்த சில விஷயங்களை கூறியபோது அனைவரும் ஆவலுடன் கேட்டதுடன்சார் அவுங்க அவ்வளவு பெரிய ஆளாஎன ஆச்சரியப்பட்டனர்.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பற்றிய சில தகவல்கள் கீழே.



  • புதுக்கோட்டையில் பிறாந்த இவர் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்.
  • மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம் என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற தமிழகப் பெண்மணி
  • இந்திய அரசின் உதவித்தொகை பெற்று பிரிட்டனுக்கு சென்று, பெண்கள் - குழந்தைகளின் நோய் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் பெண்.
  • தமிழக சட்டமன்றாத்தில் துணைத்தலைவர் என்ற பதவியை எதிர்ப்பில்லாமல் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அகியவர்களுடன் இணைந்து இந்திய மகளிர் மன்றம் என்ற அமைப்பை பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவதற்காக துவங்கியவர்.
  • பால்ய விவாகம் ஒழிய முக்கியக் காரணமாக இருந்தவர்.
  • நகராட்சி,சட்டமன்றம்,சட்டமேலவை ஆகியவைகளில் பெண்களுக்கும் உரிமைவேண்டும் என்பற்கு எடுத்துக் காட்டாக இவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்.
  • தேவதாசி முறைகள் இருக்கக் கூடாது பெண்கள் தன்மானத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
  • அவ்வை பொதுநலப்பணி மருத்துவமணையை சென்னை அடையாறில் நிறுவியவர்.கிராம முன்னேற்றம், கிராம சுகாதாரம்,தண்ணீர்வசதி,கல்வி வசதி,நூலக வசதி ஆகியவைகளை அமைத்துத் தந்தவர்.
  • அவ்வை இல்லம் உறுவாக்கியவர். இங்குள்ள பெண்கள் மருத்துவ மணைகளில் நர்ஸ்களாகவும்,சுகாதார மேற்பார்வையாளர்களாகவும்,கிராம சேவகிகளாகவும்,சுகாதார செவிலியராகவும்,பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உறுவாக்கப் பட்டுள்ளனர்.
  • சென்னை புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தை நிறுவியவர்.
  • மகாத்மா காந்தியினிடத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி 1945 ல் டாக்டர் ராமச்ச்சந்திரன் என்பவர் திண்டுக்கல் அருகே காந்திகிராமம் என்ற ஒரு கிராமம் அமைய பரிந்துரைச் செய்து , காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.
  • காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து ஆங்கில கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட தனது சட்ட மன்ற மேலவை உறுப்பினர், துணைத்தலைவர்,பதவிகளை ராஜினாமா செய்தவர்.
  • 1933ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
  • “மிஸ்மேயோவின்” புத்தகக் குறிப்புகள் இந்திய மருத்துவமணை நோயாளிகள் பற்றிய குறிப்புத்தானே தவிர இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல::” என அமெரிக்காவிலே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர்.
  • 1952 ல் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றபோது இவரை மீண்டும் மேலவை உறுப்பினராக கேட்டுக் கொண்டார்.அதைவிட முக்கியமானது புற்று நோய் மருத்துவ மணை அமைப்பது என்று சொல்லி மேலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தார்.
  • மகாகவி பாரதியை நேரில் சந்தித்தவர்.பாரதியே இவரிடம் பெணுரிமை பற்றி அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்டிரிக்கையி எழுத கேட்டுக் கொண்டார்.
  • “எனது சட்டமன்ற அனுபவங்கள்” என்ற நூலை எழுதியவர்.
  • இவரது கணவர் திரு.சுந்தர ரெட்டி.இவரும் டாக்டர்.தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியாரின் தமக்கை மகன் இவர்.

05 December 2011

டிசம்பர் 10 முதல் மகப்பேறு உதவித்திட்டம் ரூ12000

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம் 10 டிசம்பர் 2012 முதல் அமல் படுத்தப்பட உள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2,3 தேதிகளில் சென்னையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் தைலைமையில் நடந்த துணை இயக்குனர்கள் ஆய்வுக்கூட்டத்திற்கு பின் இச்செய்தி வெளியாகியுள்ளது.

எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட்,ஸ்கேன்,மற்றும் இரத்தப் பரிசோதணை உபகரணங்கள் பழுதானால் அதனை பழுது நீக்கம் செய்ய உதவும்  வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள் குறுந்தகடை நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் வெளியிட்டுள்ளார்.


27 November 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் புதிய ஆணை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பாக புதிய அரசு ஆணை G.O.(MS) No.276 H&FW dept dt.03.11.2011 வெளியிட்டுள்ளது .அரசு வலைத்தளத்தில் இவ்வாணை வெளியிடப்படவில்லை ஏனென்று தெரியவில்லை , எனவே,ஆரசு ஆணை ஸ்கேன் செய்யப்பட்டு இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,இது முழுமையாக தமிழில் வெளியிட்டிருந்தால் பொதுமக்களுக்கும்,கிராம சுகாதார செவிலியர்,அங்கன்வாடி பணியாளர் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
சிறப்பம்சங்கள்

  • உதவித்தொகை ரூ 6000 க்கு பதிலாக ரூ.12000
  • 4000 வீதம் மூறு தவணைகளில்
  • ஆன் லைன் PICME பதிவு அவசியம்
  • முதல் 4000 ஆன் லைன் பதிவின் அடிப்படையில்
  • அரசு மருத்துவமணை , ஆரம்ப சுகாதார நிலையம்,இங்கெல்லாம் பிரசவம் நடை பெற்றிருந்தால் மட்டும் வழங்கப்படும்
  • தனியார் மருத்துவ மணை பிரசவங்களுக்கு கிடையாது
  • 01.06.2011 லிருந்து நடக்கும் பிரசவங்களுக்கு மட்டும் பொருந்தும்.
நேரடியாக கூகிளிலிருந்து டவுன்லோடு செய்ய இங்கே செல்லவும்
https://docs.google.com/document/d/1BK5r7UiC9mV4-O6O7DLwcZI9BDH70-0p2Vdx63pxwNg/edit
Drmrmbs Go

29 September 2011

Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கீழ்கண்ட குறிப்புகள் செய்யாறு மாவட்ட உதவி இயக்குனர் (புள்ளியியல்) திரு.பாஸ்கர் அவர்கள் அவர்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இது அரசு கடிதமா எனத் தெரியவில்லை.ஆரம்ப நிலையில் ஒரு புரிதலுக்குப் பயன்படும்.

Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details


16 February 2009

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் படிவம்

டாக்டர்.முத்துலச்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கர்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000 மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000 ம் வழங்கப்படுகிறது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு தனி படிவமும்,ஏனையோருக்கு தனி படிவமும் கிராம சுகாதார செவிலியரால் வழன்க்கப்படுகிறாது.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் ரூ.3000 மட்டும் வழங்கப்படும்.அதற்கான படிவம் தனியே ஊள்ளது.ஆக மொத்தம் இத் திட்டத்தின் கீழ் 3 வகையான படிவங்களில் மனுக்கள் உள்ளன.
மாதிரிகள் இங்கே.
1.வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்.
2.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்.
3.உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்


வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கர்பிணி பெண்களுக்கான படிவம்

Muthulakshmi Application Form-Revised


உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து உறுப்பினர்களுக்கு உரிய படிவம்

FSSS Application Form-Revised


உழவர்பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள குடும்பத்து கர்பிணிப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டால் அதற்கன படிவம்

FSSS Abortion Application Form-Revised

14 February 2009

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

ஜனவரிமாதம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்.முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கர்பிணிப்பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ரூ.3000/ மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ.3000/ வழங்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இங்கே பிடிஃப் வடிவில்.

Jan 09

02 September 2008

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கர்பிணி பெண்களுக்கு

கருவிலே வளரும் சிசு உருவுடனும் திருவுடனும் வளர்ந்திட கர்ப்பிணித்தாய்வலிவோடும் பொலிவோடும் வாழ்ந்திட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது றது. இத்திட்டத்திற்கென ரூ.400கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டில் 2,41,095 கர்ப்பிணிகளும்,2007 ஆம் ஆண்டில் 5,62,420 கர்ப்பிணித்தாய்மார்களும் இதுவரைபயனடைந் திருக்கிறார்கள்.