கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.
இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மஞ்சள் தூளுக்கு ரேஷன் கடையில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசியை மாவு போல பவுடராக்கி, அதனுடன், "லெட் குரோமேட்' என்ற துத்தநாக ரசாயனத்தை கலப்படம்
செய்கின்றனர்
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் சில்கி, இன்னொன்று செகண்ட்ஸ். இந்த சில்கி தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும். கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த செகண்ட்ஸைதான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியொரு ரூபத்தில்
அங்கே காத்துக் கொண்டிருக்கும்
கூட்டு பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கபடுகின்றன. குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதை பொருட்களும் கலக்கபடுகின்றன
பி.கு( டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம்
2.நன்றாக பொடியாக்கபட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி)
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது
நன்றி http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_7706.html
http://foodsafetynews.wordpress.com/
http://www.mohfw.nic.in/pfa.htm
http://www.pfndai.com/Gazette%20pdfs/GSR44E22-01-09DraftPFAamend_SampleAmtForAnalysis.pdf
http://www.mohfw.nic.in/pfa%20acts%20and%20rules.pdf
1.09.2010 குமுதத்தில் இயக்குனரின் பேட்டி