Showing posts with label அரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள். Show all posts
Showing posts with label அரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள். Show all posts

09 December 2012

JSSK

                                     ஜனனி சிசு சுரக்‌ஷா காரியக்ரம்
                    janani shishu suraksha karyakram
                           Guidlines 

பிரசவ இறப்புக்களைத் தடுக்கும் முயற்சியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது 67 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பிறந்த ஒரு மாதத்தில் 9 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.

இந்தத் திட்டம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அரசு மருத்துவ நிறுவனங்களில் இலவச பிரவசத்துக்கான உரிமையை வழங்குகிறது

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மருந்துகளும், மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்படும்

பெரிய மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் பரிந்துரைக்கப்பட்டால் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்

குழந்தை பிறந்த 30 நாட்களில் அதற்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கான செலவையும் இந்தத் திட்டத்தின் மூலம் பெறலாம்

விளக்கமாக அறிந்துகொள்ள கீழ்கண்ட வெளியீட்டினை படிக்கவும்
டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்




(டவுன்லோடு செய்ய வலது மேல் மூலையில் உள்ள

என்ற பட்டனை கிளிக் செய்தால் வேறு ஒரு புதிய விண்டோவில் இந்த டாக்குமெண்ட் திறக்கும் அதில் File கிளிக் செய்து Download ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்தலாம்)
தமிழ்நாடு மாநிலத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு விவரம் கீழே.ஓட்டுனருக்கான மாத ஊதியம் ரூ.4000 என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை வழங்கலாம் கூடுதலாக தொகை தேவைப்படின் எழுதி கேட்டுப் பெறலாம். எனவே ரூ 4000 மாத ஊதியத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தொகை வந்தாலும் வழங்கலாம்.

06 March 2012

Re-constructive Surgery (RCS)

தோகைமலை முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த நாவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்னாவி அவர்களுக்கு  திருச்சி பாத்திமாநகரில் ”ஹோலி பேமலி ஹேன்சனோரியம்” மையத்தில் (Re-constructive Surgery (RCS)) முடநீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான உதவித்தொகை ரூ.5000 16.02.2012 அன்று காவல் காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது.அது சமயம் மாவட்ட தொழுநோய் அலுவலகத்திலிருந்து திரு.பெருமாள்,ஹெல்த் எஜுகேட்டர், திரு.சந்திரசேகர் என்.எம்.எஸ் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் என்.எம்.எஸ் ஆஹியோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கு தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்,


16 September 2011

2011-12 கொள்கை விளக்கக் குறிப்பு

2011-12 மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு

Health Family Welfare t

நேரடி டவுண்லோடுக்கு இங்கே கிளிக்கவும்
https://docs.google.com/document/d/1wWo7Qfl9RAu8pX4XBXRtRpVflzOX2TjR2i-vLjoLfkQ/edit?hl=en_US

04 August 2011

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின்

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வ்ழங்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இலவசம் தேவையானது தான்.நடுத்தர குடும்பங்களிளேயே இது ஆடம்பரம் என்றும் அவசியமற்றது எனவும் கருதும் குடும்பப் பெருசுகளும், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.கிராமப் புறத்தில் கேட்கவே வேண்டாம்.வரவேற்போம்.

தேசிய ஊரக சுகாதார திட்டம் (என்।ஆர்।ஹெச்.எம்.)NRHM மூலம் குறைந்த விலை அளவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மேமாதமே அறிவிப்பு வந்தது..மத்திய அரசின் அறிவிப்பின் படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வழங்குவதாக உத்தேசம்.ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்.ஆனால் தமிழக அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக மத்திய அரசு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இந்திய அளவில் 235 மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு,மராட்டியம், குஜராதில் 30 மாவட்ட பெண்கள் பயனடைவர் என NRHM அறிவிதிருந்தது.NRHM வழங்க உள்ள இதன் brand Name " freedays"




05 March 2009

அரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள்



மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்துள்ளதை முன்னிட்டு அரசு நலத்திட்டங்கள் பற்றிய பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் மற்றும் அன்றாடப்பணிகள் பற்றிய பொது பதிவுகள் மட்டும் பதிவு செய்யப்படும்.