Showing posts with label ICTC.நம்பிக்கை மையம். Show all posts
Showing posts with label ICTC.நம்பிக்கை மையம். Show all posts

17 May 2012

ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்




கரூர் ரயில்வே ஸ்டேஷனில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் (எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில்) பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களிடையே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 9 ம் தேதி ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.


நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததுள்ளது. விழிப்புணர்வு ரயிலில் ஆறு பெட்டிகள் உள்ளது. 
1.முதல் பெட்டியில் ஹெச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த தொடுதிரை, 3டீ மாதிரி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


2.இரண்டாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களுக்கான மருத்துவ சேவைகளும், 


3.மூன்றாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களை சமுதாயத்தில் அங்கீகரிப்பது தொடர்பான விளக்க படங்கள், கூட்டு மருத்துவ முறைகள் .


4. நான்காவது பெட்டியில் தாய்சேய் நலம், பொது சுகாதாரம் மற்றும் காசநோய், பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு படங்கள் உள்ளது.


5.ஐந்தாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த கருத்தரங்குகள், வகுப்புகள் நடக்கிறது.


6. ஆறாவது பெட்டியில் பால்வினை மற்றும் எய்ட்ஸ் தொற்றுகள் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் (17ம் தேதி) வரை நிற்கிறது.


 இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு பஞ்சாயத்து யூனியன்களிலும் இருந்து கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 


காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொதுமக்கள் பார்வையிடலாம்.









31 July 2010

எயிட்ஸ் ஜாகோ


பில்கேட்ஸின் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் “ஆதரவு மற்றும் நிதியுதவியுடன்'எயிட்ஸ் ஜாகோ' என்ற பெயரில் இந்திய திரையுலக முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள எயிட்ஸ் பற்றிய நான்கு குறும்படங்கள் 22.07.10 அன்று சென்னையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

1.மீரா நாயர் இயக்கிய மைக்ரேஷன்


2.ஃபர்ஹான் அக்தர் இயக்கிய - பாசிடிவ்




3..சந்தோஷ்சிவன் இயக்கிய ப்ராரம்ப்(தி பிகினிங்)

http://www.youtube.com/watch?v=wTeG4K3v_hw


4.. விஷால் பரத்வாஜ் இயக்கிய பிளட் பிரதர்ஸ்

இந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் ஹிந்தியிலும் ஒரு படம் (சந்தோஷ் சிவன் இயக்கியது ) மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்பபடங்கள் குறித்த சுருக்கத்தினை இங்கே ஒருவார்த்தை வலைப்பூவில் படியுங்கள்.
இப்படங்களைப் பற்றிய குறிப்புகளே மிக உருக்கமாக இருக்கிறது.
பிரபலமான நடிகர்கள்,(பிரபு தேவா,சித்தார்த்,ஷமீராரெட்டி.)டெக்னீஷியன் கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படங்கள் கண்டிப்பாக மக்களைச் சென்றடையும்.

நீங்களும் உங்கள் பகுதியில் இந்த நான்கு திரைப்படங்களையும் பார்க்கவோ அல்லது திரையிடவோ விரும்பினால் டி ஏ ஐ - வி ஹெச் எஸ் - ஐ 044 - 22542355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என மேலே சுட்டப்பட்ட வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 January 2009

தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி



Photobucket



Photobucket


Photobucket






இன்று 05.01.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரத்த சேமிப்பு நிலையத்தின் பயன் பாட்டினை பார்வையிட தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மேற்பார்வையாளராக மரு.இராதகிருஷ்ணன்(tech. support unit TANSACs,NACO) அவர்களும் அவருடன் கோவையிலிருந்து பயோ மெடிகல் பொறியாளர் திரு.பாலராஜ சேகர் அவர்களும் வந்திருந்தனர்.மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,ஐ சி டி சி கவுன்சிலர் திருமதி.சுதா,மற்றும் ஆய்வக நுட்புனர் திரு.அழகர் ஆகியோர் உடனிருந்தனர்.