Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

23 August 2014

அஞ்சலி

                                                                        அஞ்சலி





பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ( இம்யூனிசேஷன்) டாக்டர் திரு.என்.அய்யனார் அவர்கள் இன்று 23.08.2014 அதிகாலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.என்ற செய்தி ஏ.பி.எம். டாக்டர் தினேஷ் அவர்கள் மூலம் குறுஞ்செய்தியாகக் கிடைக்கப் பெற்றது.டாக்டர் அய்யனார் அவர்களின் இழப்பு துறைக்கு ஈடுசெய்ய முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை பாலுமகேந்திரா கேப் என பார்த்தவுடனே கொஞ்சம் அசத்தும் தோற்றத்துக்குச் சொந்தக்காரர்.எளிமையான குடும்பத்திலிருந்து படித்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்.இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்தபோது இவருடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற நண்பர் செல்வமோகனக்குமார் கண்மருத்துவ உதவியாளர் அவர்கள் இவரது எளிமையினைப்பற்றி பிரஸ்தாபித்துக் கூறுவார்.(சைக்கிளில் இருவரும் சாப்பிட மெஸ்ஸுக்கு செல்லுவார்களாம்.)
 தருமபுரி துணை இயக்குனராக இருந்தபோது மாநிலத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஏனைய மாவட்டங்களில் இருந்து ஒரு குழுவாக மருத்துவர்களை தர்மபுரி மாவட்டத்திற்கு அனுப்பி ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு வர துறை கேட்டுக்கொண்டது.
                      தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 25.2.14 அன்று டாக்டார் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான மண்டல ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் இணை இயக்குனர் திரு.அய்யனார் அவர்கள் உரை யினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.சப்ஜக்ட் தவிர வேறு எங்கும் திசைதிரும்பாமலும் அதே நேரத்தில் பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமலும் பேசுபவர்கள் அபூர்வம்.5000 மக்கள் தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி ஒருநாளைக்கு எவ்வளவு பிக்மி எண்ட்ரி போடவேண்டியிருக்கும் என வரையறுத்துச் சொன்ன விதம் எளிதில் பிடிபட்டது.ஒரு பேராசிரியரின் நுனுக்கம் இவரது பேச்சில் இருந்தது.


நான் அவரிடம் பணிபுரிந்ததில்லை.11.4.13 நக்கீரன் பத்திரிக்கையில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் உள்ள குழப்பங்களை எழுதி துறையையும் பணியாற்றுபவர்களையும் சாடியிருந்தனர்.நான் அதற்கு ஒரு மறுப்புறையை (லிங்க்) எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன்.அதனைப்படித்த அவர் ஒரு நண்பர்மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அப்போது அவர் இம்யூனிசேஷன் இணைஇயக்குனராக இருக்கவில்லை என நினைக்கிறேன்.
நல்ல நிர்வாகியை துறை இழந்து விட்டது.
இன்று காலை செல்வமோகனக்குமார் அவர்கள் தொலைபேசியில் இச்செய்தியை கூறிவிட்டு இவ்வளவு உயர் பதவியில் இருக்கும் மருத்துவர்களே தங்கள் உடல் நலத்தை முறையாக செக்கப் செய்துகொள்ளாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது என்றார். உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

25 January 2013

அஞ்சலி


டாக்டர்.பாக்கியலட்சுமி (வயது30).  மலைக்கோவிலூர் அரசு 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். 

சேலம்-மதுரை பைபாஸ் ரோட்டில் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் 

ரவுண்டானா பகுதியில் அரசு வேனில் சென்ற போது அந்த வழியாக வந்த 

லாரியும், வேனும் மோதிக் கொண்டவிபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 
  
இதில் வேனின் அடியில் டாக்டர் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 

டாக்டர்.பாக்கிய லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு 

தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 

கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 

அவர் பரிதாபமாக இறந்தார்.இவரைப் பிர்ந்து வாடும் குடும்பத்தினருக்கு 

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம் மரணம் எதிர்காலத்தில்  கவனிக்க வேண்டிய சில கேள்விகளையும் 

விட்டுச் சென்றுள்ளன.






1.விலைமதிப்பிலா உயிர்களான  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணம் 

செய்யும் வாகனங்களுக்கு MMU,JSSK. போன்ற திட்டங்களுக்கு தற்காலிக 

தினக்கூலி ஓட்டுனர்களை நியமிப்பது நியாயமா?

2.வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 

விபத்துக்கான அதிக தொகைக்கான காப்பீட்டினை ஏன் அரசு 

செலுத்தக்கூடாது?






09 January 2010

அஞ்சலி


எங்களுடன் பணியாற்றும் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த கீழவெளியூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி திருமதி..பாப்பாத்தி அவரகளின் புதல்வி செல்வி விஷ்ணுப்பிரியா 06.01.2010 அன்று ஊத்தங்கரையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
+2 படித்துவந்தவர் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் ஏறும் போது இடறி விழுந்து தலையில் பலமான அடிபட்டு மூளை செயலிழந்து போனது.
பாப்பாத்தி அவர்கள் ஊத்தங்கரையில் ஊட்டச்சத்து பணியாளராகப் பணிபுரிந்து கிராம சுகாதார செவிலியாக கரூர் மாவட்டம் காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிநியமனம் பெற்றவர்.குடும்பம் ஊத்தங்கரைக்கு அருகில் கொமாரப்பட்டி எனும் சிறு கிராமம்.குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டு இவர்மட்டும் கீழவெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.புத்தாண்டு தினத்தன்று கூட ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்க,அவர்களுடன் இருக்க விடுப்பு எடுக்க முடியாமல் பணியாற்றினார்.தகவல் தெரிந்ததும் வட்டார அளவில் 32 ஊழியர்கள் இரண்டு தனியார் வாகனத்தில் சேலம் சென்று அங்கு அரசு மருத்துவமணை பிணவரையில் கிடத்தப்பட்டிருந்த வேரோடு பிடுங்கப்பட்ட இளம் கொடியைப்போல கிடந்த அந்த செல்வத்தை பார்த்து பார்த்து க‌ண்கல‌ங்கினோம்.விரைவாகபோஸ்ட்மார்டம் செய்யஅங்கிருந்த கண்மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த உதவிபுரிந்தனர்.
போஸ்ட்மார்டத்திற்கு முன்னதாக சடலத்தைப்பார்க்க அனுமதிக்கும் படி நான் அங்கிருந்த பொறுப்பு பெண்மருத்துவ அலுவலரைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன்.எங்களது உணர்வைப்புரிந்து கொண்டு அனுமதி வழங்கினார்.பிறகு அங்கிருந்து அரூர் வழியாக ஊத்தங்கரை செல்லும் வழியில் அரூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள"கொமாரபட்டி" கிராமத்திற்குச் சென்று சகோதரி பாப்பாத்திக்கு சொல்லமுடியாதஆறுதலைச் சொல்லி துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.
அவருக்கு ஒரே பெண்.இரண்டு ஆண்மக்கள்.தாயை பிரிந்து இருந்த குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்ட பாப்பாதியின் கணவர் திரு.ராஜாவின் கண்ணீர் எல்லோரையும் கலங்கடித்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னர் 04.01.2010 அன்று தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் பேசிய பாப்பத்தியின் பேச்சு எல்லோரையும் கரைத்தது.
"இந்த வேலைக்கு வர்ரத்துக்கு முன்னாடி த்துணவுல புள்ளைகள பாத்துகிட்டிருந்தேன். இந்த ஊருக்கு வரும் போது எதுவுமே தெரியாமத்தான் வந்தேன்.வந்த பிறவு கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.இப்போ நல்லா தனியாவே டெலிவெரி பாக்குறேன்.அப்புடி நானே பாக்கும் போதுதான் "உயிரோட மதிப்பு என்னான்னு எனக்கு தெரிஞ்சுது"‍ இது அவரது பேச்சின் ஒரு பகுதி.
இந்த மாதிரியான‌ இழப்பு யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்தச் சகோதரி இனியாவது குடும்பத்துடன் வாழ்வதற்கு ஏற்றவாறு அரூர் அல்லது ஊத்தங்கரைப் பகுதியில் இவருக்கு மாறுதல் வழங்கி உதவலாம்.வந்தியத்தேவன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் இயக்குனரின் பார்வைக்கு இச் செய்தியை கொண்டு சென்று இவரது மாறுதலுக்கு உதவலாம்.