Showing posts with label VILLAGE HEALTH NURSE. Show all posts
Showing posts with label VILLAGE HEALTH NURSE. Show all posts

22 September 2013

கிராம சுகாதார செவிலியர்களுக்கு யோகா

கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம சுகாதார செவிலியர்களுக்கு திருச்சியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. முகாமில் மாவட்டத்தில் உள்ள 307 கிராம சுகாதார செவிலியர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 50 நபர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் குழுவிற்கான பயிற்சியை கலெக்டர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத் தார். தாய், சேய் நலம், சுகப்பிரசவம், தாய்ப்பால் சுரப் பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு குறித்து கிராம சுகா தார செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பகால, பிரசவ கால, பிரசவத்திற்கு பிந்திய கால இயற்கை உணவு குறித்தும், அதை தயார் செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய யோகா பயிற்சி குறித்தும் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர் கள்  கிராமப்பகுதியில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் யோகா மற் றும் இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வவு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட் டது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சீனிவாசன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.


10 November 2011

மீண்டும் தடுப்பூசிப்பணிகள் துணைசுகாதார நிலயத்திலேயே

மீண்டும் தடுப்பூசிப்பணிகள் துணைசுகாதார நிலயத்திலேயே இந்த மாதம் (நவம்பர்2011) முதல் செயல் படுத்த உத்தரவிடப்படடுள்ளது.இது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர் கடைபிடிக்கவேண்டியவைகள் பற்றிய துறையின் குறிப்புகளை அடுத்த பதிவில் இடுகிறேன்.ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணிகள் செல்கிறது.துணை சுகாதார நிலையங்களில் தடுப்புசி பணிகளில்(திருவள்ளூர் மாவட்டம்) சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதனால் (2008) லிருந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பணிகள் நடந்து வந்தது.அதற்கு முன் வரை துணை சுகாதார நிலையத்திலேயே இப்பணி நடந்தது.இவ்வாறு மாற்றம் ஏற்பட்ட போதும் 14.11.2008 ல் ”தடுப்பூசி பெரிய சவால்” என்ற பதிவு இடப்பட்டது.விரிவான விவாதமும் டாக்டர்SUREஷ் மற்றும் டாக்டர் புருனோ Bruno  ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.இம் மாற்றம் ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கு பதிவு செய்யப்படுகிறது.


இப்போது மீண்டும் துணை சுகாதார நிலையத்திற்கே இப்பணி ஏன் செல்கிறது? 
கீழ்கண்டவாறு தினமலர செய்திவெளியிட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=341658
”கிராம மக்கள், அதிக தூரத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. இதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்தது.எனவே, குழந்தைகள் நலன் கருதி, துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன் பேரில், மீண்டும், அனைத்து துணை சுகாதார நிலையங்களில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட, அரசு அனுமதி அளித்துள்ளது.”
தடுப்பூசிகள் ஆபத்தானவையா” என்ற இப்பதிவும் படிக்க வேண்டியது.

22 September 2011

(PICME) PREGNANCY AND INFANT COHORT MONITORING ENTRY

(PICME) PREGNANCY AND INFANT COHORT MONITORING ENTRY REVIEW COMDUCTED BY DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES AND FAMILYWELFARE AT THOGAMALAI PRIMARY HEALTH CENTER ON 15.09.2011



04 August 2011

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின்

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வ்ழங்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இலவசம் தேவையானது தான்.நடுத்தர குடும்பங்களிளேயே இது ஆடம்பரம் என்றும் அவசியமற்றது எனவும் கருதும் குடும்பப் பெருசுகளும், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.கிராமப் புறத்தில் கேட்கவே வேண்டாம்.வரவேற்போம்.

தேசிய ஊரக சுகாதார திட்டம் (என்।ஆர்।ஹெச்.எம்.)NRHM மூலம் குறைந்த விலை அளவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மேமாதமே அறிவிப்பு வந்தது..மத்திய அரசின் அறிவிப்பின் படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வழங்குவதாக உத்தேசம்.ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்.ஆனால் தமிழக அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக மத்திய அரசு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இந்திய அளவில் 235 மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு,மராட்டியம், குஜராதில் 30 மாவட்ட பெண்கள் பயனடைவர் என NRHM அறிவிதிருந்தது.NRHM வழங்க உள்ள இதன் brand Name " freedays"




04 May 2011

Village Health Clinic



Village Health Clinic கரூர் மாவட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட துணை சுகாதார நிலையங்களில் பிரதி திங்கள் பிற்பகலில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும் ஒர் மருத்துவக் குழு முன் பயணத்திட்ட்டத்தின் படி சம்மந்தப்பட்ட துணை சுகாதார நிலையத்திற்குச் சென்று நோயாளிகள், கர்பிணிப்பெண்களைப் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.




துணை சுகாதார நிலையத்தில் கர்பிணிப்பெண்கள்



பயனாளர்களுடன் முதன்மை குடிமை மருத்துவர் மரு.கே.குமாரசாமி






Dr.K.Kumarasamy at Pathiripatty Health sub center










09 January 2010

அஞ்சலி


எங்களுடன் பணியாற்றும் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த கீழவெளியூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி திருமதி..பாப்பாத்தி அவரகளின் புதல்வி செல்வி விஷ்ணுப்பிரியா 06.01.2010 அன்று ஊத்தங்கரையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
+2 படித்துவந்தவர் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் ஏறும் போது இடறி விழுந்து தலையில் பலமான அடிபட்டு மூளை செயலிழந்து போனது.
பாப்பாத்தி அவர்கள் ஊத்தங்கரையில் ஊட்டச்சத்து பணியாளராகப் பணிபுரிந்து கிராம சுகாதார செவிலியாக கரூர் மாவட்டம் காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிநியமனம் பெற்றவர்.குடும்பம் ஊத்தங்கரைக்கு அருகில் கொமாரப்பட்டி எனும் சிறு கிராமம்.குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டு இவர்மட்டும் கீழவெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.புத்தாண்டு தினத்தன்று கூட ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்க,அவர்களுடன் இருக்க விடுப்பு எடுக்க முடியாமல் பணியாற்றினார்.தகவல் தெரிந்ததும் வட்டார அளவில் 32 ஊழியர்கள் இரண்டு தனியார் வாகனத்தில் சேலம் சென்று அங்கு அரசு மருத்துவமணை பிணவரையில் கிடத்தப்பட்டிருந்த வேரோடு பிடுங்கப்பட்ட இளம் கொடியைப்போல கிடந்த அந்த செல்வத்தை பார்த்து பார்த்து க‌ண்கல‌ங்கினோம்.விரைவாகபோஸ்ட்மார்டம் செய்யஅங்கிருந்த கண்மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த உதவிபுரிந்தனர்.
போஸ்ட்மார்டத்திற்கு முன்னதாக சடலத்தைப்பார்க்க அனுமதிக்கும் படி நான் அங்கிருந்த பொறுப்பு பெண்மருத்துவ அலுவலரைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன்.எங்களது உணர்வைப்புரிந்து கொண்டு அனுமதி வழங்கினார்.பிறகு அங்கிருந்து அரூர் வழியாக ஊத்தங்கரை செல்லும் வழியில் அரூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள"கொமாரபட்டி" கிராமத்திற்குச் சென்று சகோதரி பாப்பாத்திக்கு சொல்லமுடியாதஆறுதலைச் சொல்லி துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.
அவருக்கு ஒரே பெண்.இரண்டு ஆண்மக்கள்.தாயை பிரிந்து இருந்த குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்ட பாப்பாதியின் கணவர் திரு.ராஜாவின் கண்ணீர் எல்லோரையும் கலங்கடித்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னர் 04.01.2010 அன்று தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் பேசிய பாப்பத்தியின் பேச்சு எல்லோரையும் கரைத்தது.
"இந்த வேலைக்கு வர்ரத்துக்கு முன்னாடி த்துணவுல புள்ளைகள பாத்துகிட்டிருந்தேன். இந்த ஊருக்கு வரும் போது எதுவுமே தெரியாமத்தான் வந்தேன்.வந்த பிறவு கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.இப்போ நல்லா தனியாவே டெலிவெரி பாக்குறேன்.அப்புடி நானே பாக்கும் போதுதான் "உயிரோட மதிப்பு என்னான்னு எனக்கு தெரிஞ்சுது"‍ இது அவரது பேச்சின் ஒரு பகுதி.
இந்த மாதிரியான‌ இழப்பு யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்தச் சகோதரி இனியாவது குடும்பத்துடன் வாழ்வதற்கு ஏற்றவாறு அரூர் அல்லது ஊத்தங்கரைப் பகுதியில் இவருக்கு மாறுதல் வழங்கி உதவலாம்.வந்தியத்தேவன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் இயக்குனரின் பார்வைக்கு இச் செய்தியை கொண்டு சென்று இவரது மாறுதலுக்கு உதவலாம்.