Showing posts with label துறை சார்ந்த இதழ்கள். Show all posts
Showing posts with label துறை சார்ந்த இதழ்கள். Show all posts

15 May 2012

அரசு மருந்தாளுனர் குரல்

துறை சார்ந்த இதழ்கள்: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்திலிருந்து வெளிவரும் இதழ் .தொடந்து சங்க விவரங்களையும் செயல்பாடுகளையும் தங்களது உறுப்பினர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது.லேஅவுட் மிகச்சிறந்து வடிவமைக்கப் பட்டுள்ளது.புகைப்படங்கள் தாராளமாக வெளியிடுகின்றனர்.அரசு ஆணைகள்,முது நிலை பட்டியல்கள்,ஓய்வு பெறுபவர்களுக்கு பாராட்டு என்பதோடு மட்டுமல்லாமல் சங்கம் சாராத “மருந்து நிறுவனக்களின் கோரமுகங்கள்’ போன்ற விவரமான கட்டுரையும் வெளியிடுகிறனர்.”அனல் வழி” என்ற ஒரு கவிதை இந்த இதழில் வெளிவந்துள்ளது.உழைக்கும் மகளிர் மனக்குமுறல் அப்படியே கொட்டித்தீர்த்திருக்கிறார்.யார் எழுதியது? பெயர் இல்லை.
ஒரு இடத்தில் இப்படி வருகிறது.

“ என்னைவிட என் வேலையை
அவர்தான் நேசிக்கிறார்.
என் ஊதியம்: விழாமுன்பணம்:
நிலுவைத்தொகைகள்
புள்ளி விபரமாய்ப்
புரியும் அவருக்கு”

ஏ.டி.எம் கார்டை கணவனிடம் கொடுத்துவிட்டு ஊதியத்தின் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் இயந்திரமாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் ஊழியரின் குரல்.மனதைத் தொட்ட கவிதை.


முகவரி மற்றும் ஆசிரியர்க் குழு