2011 டிசம்பர் 22 ல் பெண்டாவேலண்ட் தடுப்பூசி கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக சேங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சோபனா துவக்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் கரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் திரு.சம்பத்குமார்,ஒன்றியக் குழுத்தலைவர் முத்துசாமி,டாக்டர்.பிச்சைமுத்து,மாவட்ட பூச்சியல் வல்லுனர் திரு,சிவக்குமார் சித்த மருத்துவர் சித்ரா,தாசில்தார் மூக்கன்,சட்டமன்ற உறுப்பினர் காம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
Showing posts with label பெண்டாவேலண்ட். Show all posts
Showing posts with label பெண்டாவேலண்ட். Show all posts
25 December 2011
17 December 2011
"பெண்டாவேலண்ட்"வேலூரில் அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
குழந்தைகளுக்கு 6 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலூரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரம் சம்பந்தமான சிறந்த உள்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றிருப்ப தாலும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்தது.
வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய தடுப்பூசி தொடக்கவிழா இன்று நடந்தது. சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் முகமது ஜான், எம்.எல்.ஏ.க்கள் கலையரசு, சீனிவாசன், மேயர் கார்த்தயாயினி, கலெக்டர் நாகராஜன், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.பொற்கைப் பாண்டியன் மற்றும் வேலூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். . பெண்டாவேலண்ட் தடுப்பூசி அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
- குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகளின் எண்ணிக்கை குறைகிறது.
- புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது.
நடப்பு ஆண்டில் 2011-12-ல் 3.60 லட்சம் குழந்தைகள் பெண்டா வேலண்ட் தடுப்பூசியின் மூலம் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் ஸ்டைல் வேண்டாம்!
இந்த விழாவில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான புகையில்லா திட்டத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் குறித்து அமைச்சர் பேசியது:
புகையிலையால் ஏற்படும் தீமை எல்லோரும் அறிந்த ஒன்று. பொது இடங்களில் புகைப்பிடிப்போரை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். வீடுகளில் புகைப் பிடிப்பதை தாய்மார்கள் தடுக்க வேண்டும். நாங்கள் எம்ஜிஆரை பார்த்து கழகத்தில் இணைந்தவர்கள். அவர் புகைப்பிடித்ததும், மது அருந்தியதும் இல்லை. அவர் வழியில் வந்த தொண்டர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாவதில்லை. இன்றைய நடிகர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
பெண்டாவேலண்ட்' தடுப்பூசி: பத்திரிகை செய்தி வெளியீடு
பெண்டாவேலண்ட் தடுப்பூசி தொடர்பாக அரசு 15.12.2011 அன்று வெளியிட்டுள்ள செய்தி [Press release Introduction of Pentavalent vaccine in Tamil Nadu ] கீழே.இத் தடுப்பூசி தொடர்பான முந்தைய பதிவை படிக்க இங்கு செல்லவும்
11 December 2011
பெண்டாவேலண்ட்' தடுப்பூசி:
pentavalent vaccine
"பெண்டாவேலண்ட் தடுப்பூசியால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,முன்னெச்சரிக்கையாக, ராமப்புறங்களில் தடுப்பூசி போடும் இடங்களுக்கே, டாக்டர்கள் அனுப்படுவர்.இந்த தடுப்பு மருந்து, வெளிச்சந்தையில், 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், இலவசமாக வழங்கப்படும்,''
குழந்தைகளை வெகுவாக அச்சுறுத்தி வந்த,
· தொண்டை அடைப்பான்,
· கக்குவான் இருமல்,
· ரண ஜன்னி ஆகிய நோய்கள்,
தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டன. இந்த நோய்களுக்கு, டி.பி.டி., தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது, இந்நோய்களையும் சேர்த்து,
· ஹெப்படைட்டீஸ் பி தடுப்பு மருந்து,
· நிமோனியா காய்ச்சல்
· மூளைக் காய்ச்சலை தடுக்கும், "ஹிப்' தடுப்பு மருந்து
diphtheria, pertussis, tetanus, hepatitis B and haemophilus influenza type B (HiB)
ஆகிய நோய்களுக்கும்,"பெண்டாவேலண்ட்' என்ற ஒரே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மருந்து, இந்தியாவில் முதல்கட்டமாக, தமிழகம் மற்றும் கேரளத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது என்பது, பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
"பெண்டாவேலண்ட் தடுப்பூசியால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,முன்னெச்சரிக்கையாக, ராமப்புறங்களில் தடுப்பூசி போடும் இடங்களுக்கே, டாக்டர்கள் அனுப்படுவர்.இந்த தடுப்பு மருந்து, வெளிச்சந்தையில், 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், இலவசமாக வழங்கப்படும்,''
முதல்தமிழகத்தில், வரும் டிச., 17ம் தேதி, வேலூரில் நடக்கும் விழாவில்,
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
வரும் டிச.21ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
Subscribe to:
Posts (Atom)

