தோகைமலை முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த நாவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்னாவி அவர்களுக்கு திருச்சி பாத்திமாநகரில் ”ஹோலி பேமலி ஹேன்சனோரியம்” மையத்தில் (Re-constructive Surgery (RCS)) முடநீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான உதவித்தொகை ரூ.5000 16.02.2012 அன்று காவல் காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது.அது சமயம் மாவட்ட தொழுநோய் அலுவலகத்திலிருந்து திரு.பெருமாள்,ஹெல்த் எஜுகேட்டர், திரு.சந்திரசேகர் என்.எம்.எஸ் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் என்.எம்.எஸ் ஆஹியோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கு தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்,
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
Showing posts with label தொழு நோய். Show all posts
Showing posts with label தொழு நோய். Show all posts
06 March 2012
07 October 2008
தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கலைக்குழு
இன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஒரு கலைக்குழு ஆ.சு.நி.க்கு வந்திருந்தது.தொழுநோய் பற்றிய பல தகவல் களை மிக யதார்தமாக ஒரே ஒரு மைக் வைத்து கொண்டு பர்வையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்து கவனிக்கச் செய்துவிடும் லாவகம் அபாரம்.கணவன் மனைவி பாத்திரஙளை ஏற்று நடித்த இருவரும் நடிக்க வில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பேசும்போது நடிப்பது போனற ஒரு நளினம்.கிட்ட தட்ட டப்பிங் கலை.உடலில் ஏற்படும் தேமல்கள் பற்றி பொது மக்களிடம் ஊள்ள அறியாமை என்ன என்பதை (எச்சிதழும்பு,அதிர்ஷ்டதழும்பு) நகைச்சுவயுடன்விளக்கியதோடு . அறிகுறி உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன, யாரை தொடர்பு கொள்ள வேண்டும், போன்ற பல தகவல்களை அற்புதமான எற்ற இறக்க வசனங்களுடன் நடித்த பாங்கு நன்றாய் யிருந்தது.நிகழ்சி ஏற்பாடுகளை திரு.டி.ஜெயராமன் என்.எம்.ஸ். அவர்கள் செய்திருந்தார்.மருத்துவ அலுவலர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சமூக சுகாதார செவிலி,கண்காணிப்பளர் ஆகியோர் ந்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
