Showing posts with label டெங்கு. Show all posts
Showing posts with label டெங்கு. Show all posts

09 October 2014

மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்

29.09.2014 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில்  மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . (திருச்சி, புதுக்கோட்டை,அறந்தாங்கி, திருவாரூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர் உள்ளடக்கியது)

















24 December 2012

டெங்கு விழிப்புணர்வுக் குறும்படம்

11 December 2012

மக்கள் மொழியில் டெங்கு பாடல்


டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக மக்களுக்கு புரியும் மொழியில் அடித்தட்டு மக்களுக்காக பாடல் எழுதி தான் செல்லும் கிராமங்களில் பாடல் மூலமாக மக்களிடமும்,மாணவ மாணவிகளிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் திரு.ச.பூவராகன் அவர்கள்.அவரது

 பாடல் இங்கே.


டெங்கு, டெங்கு, காய்ச்சலுன்னு
தேசம் பூரா  பேசுறாங்க
தங்குமிடம் அழித்து விட்டால்
தடுத்திடலாம் டெங்கு காய்ச்சலை...

வண்ண ,  வண்ண ஏடிஸ்கொசு
வாட்டுதம்மா லேடிஸ்கொசு
சின்ன சின்ன முட்டையிட்டு
சீரழிக்கும் டைகர்கொசு...

தண்ணி ,தண்ணி தொட்டிகளில்
தலைகீழா துடித்து வாழும்
எண்ணி எண்ணி ஏழுநாளில்
எழுந்துவந்து கடிக்குதம்மா...

வீட்டைச்சுற்றி மழைநீரை
தேக்கிவைக்க கூடாதக்கா
டப்பா,டயர்,குடக்கல்லை
தலைகீழா கவிழ்த்திடக்கா...

நமது நலவாழ்வு
நம் கையில் இருக்குதண்ணே
கொசுப்புழுவை  ஒழித்துவிட்டால்
குறையில்லாமல் வாழலாண்ணே...


சுத்தம் சுகாதாரம் பேணிகாப்போம் ! டெங்குவை ஒழிக்க சபதம் ஏற்போம்   !  

ச. பூவராகன்
சுகாதார ஆய்வாளர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  ,  ஆவட்டி
மங்களூர் வட்டாரம்,கடலூர் மாவட்டம்.

06 December 2012

கலைக்குழு வருகை

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கலைக்குழு தோகைமலை வட்டாரம் வந்தது.பேருந்து நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக இருந்தது.



30 November 2012

டெங்கு களப்பணி அனுபவங்கள்-2

கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சமி சொக்கலிங்கம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளஒர் விஷயம்.
ஒரு கிராமத்தில் கோவில் உண்டியலாக ஒரு எவர்சில்வர் குடத்தினை வெட்டவெளியில்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள்.மழை பெய்து உண்டியல் ஓட்டை வழியாக நீர் சேர்ந்து கொசுபுழுக்கள் உறுவாகியுள்ளது.அதனை கண்டறிந்த களப்பணியாளர்கள் உண்டியலை அகற்றச்சொல்லி ஊர் மக்களிடம் கேட்டுள்ளனர்.மக்களோ “சாமி குத்தம்” அயிடும் என பயந்து உண்டியலை அகற்ற மறுத்துள்ளனர்.பிறகு சாதுரியமாக சாமிகுத்தமும் ஆகாமல்,கொழுப்புழுவும் வளராமல் இருக்க மண் கொண்டு உண்டியல் வாயை பூசி மூடியுள்ளனர்.
படிப்பினை:
இனி,டயர்,கப்,தேங்காய் சிரட்டய்,பூந்தொட்டி...இவைகளுடன் ஓபன் உண்டியலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                                               சிகிச்சைக்கு முன்?

சிகிச்சைக்குப் பின்




22 November 2012

டெங்கு தடுப்பு: சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்சியர் அழைப்பு


திருச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட கிராமப்புறங்களில் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 7 பேர் மற்றும் 35 சுகாதார ஆய்வாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர்.
 
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 500, சுகாதார ஆய்வாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 400 வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, விருப்பமுள்ளவர்கள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தை அணுகலாம்.

குறிப்பு:

இது மாதிரியான பணியமர்த்தல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உண்டு

26 October 2012

Dengue Practical Guide

https://docs.google.com/open?id=0B98TwrEkKgTPbGNfaGVvWVN3TEk

டெங்கு களப்பணி அனுபவங்கள்

டெங்கு தொடர்பான களப்பணியில் இருந்த நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சில தகவல்களை பகிந்து கொண்டார்கள்.எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்,

                1.ஒரு வீட்டில் சிமெண்ட் தொட்டி நிறைய நீர்பிடித்து ஸ்டோர் செய்து வைத்திருந்தார்களாம். தொட்டி நிறைய ஏராளமான கொசுப் புழுக்கள்.டாக்டர் சதீஷ்குமாரும் என்.எம்.எஸ்.திரு.மனோகரன் அவர்களும் நீரை காலிசெய்யும்படி வீட்டு பெண்மணியிடம் கூறினார்களாம்.இந்த புழுக்கள் எல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்குள் கொசுக்களாகிவிடும் என எடுத்துச் சொல்லியும் அந்த பெண்மணி தொட்டியை காலி செய்ய அனுமதிக்கவில்லை.அதோடில்லாமல் சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி ரகளையே செய்துவிட்டார்களாம்.ஒருவழியாக எதிர்ப்பையும் மீறி தொட்டியை காலிசெய்துவிட்டு வர பெரும் பாடு ஆகிவிட்டதாம்.

            2. படித்த நடுத்தர மக்களிடையே கூட விழிப்புணர்வு இல்லாதது தெரிய வருகிறது. கொலு வைத்திருந்த ஒரு விட்டில் 10 நாட்களாக பார்க் செய்து குளம் செட் வைத்திருந்தார்கள். தினமும் நீரை மாற்றாமல் இருந்ததால் குளம் நிறைய கொசுப்புழுக்கள். எடுத்துச் சொன்னபிறகு அதனைக் காலி செய்தார்கள்.

           3.நீர் தேங்கியிருந்த ஒரு வீட்டுத் தொட்டியில் மருந்தினை ஊற்றிய ஒரு மஸ்தூரை வீட்டுக் காரர் சரமாரியாக திட்டியுள்ளார்.எடுத்துச் சொல்லி புரியவைக்க பெரும்பாடு பட்டுப் போனார்களாம்.

            4.எல்லா இடத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததில் பள்ளி மாணவர்களிடம் செய்யப் பட்ட பிரச்சாரம் தான் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறதாம்.வீட்டை சுற்றி யுள்ள பிளாஸ்டிக் கப்,தேங்காய் சிரட்டை இவைகளை அப்புறப்படுத்துவதில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனராம்.

16 July 2012

டெங்கு தொடர்பான நோட்டீஸ்.


15 June 2012

டெங்கு

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க களப்பணி மற்றும் கிராம துப்புறவுக் குழுவினர் , மக்கள் பிரதிநிதிகள்,மஸ்தூர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிலரங்குகள், தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்றது.
    

குறிப்பு:
2010 ம் வருடம் தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை காண இங்கு கிளிக் செய்யவும்


 நீர் பிடிப்புத் தொட்டிகளில் லார்வா ( கொசுப் புழு) உள்ளதா என மருத்துவ அலுவலரும் சுகாதார ஆய்வாஆய்வாளரும் ஆய்வு செய்கின்றனர்.



 பணியில் பகுதி சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்



 மஸ்தூர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார மற்றும் துப்புரவுக் குழ்வினருக்கான விழிப்புணர்வு முகாம்.



மாவட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மரு.பிச்சைமுத்து அவர்களின் உரை.


ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மஸ்தூரகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிலரங்கம் நடத்தும் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரபாகரன்


 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ராஜன் அவர்களின் உரை

 களப்பணி


21 July 2010

டெங்கு எதிர்ப்பு மாதம்


டெங்கு எதிர்ப்பு மாத நடவடிக்கையாக 21.07.2010 அன்று தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை பூச்சியியல் வல்லுனர் திரு.S.ஸ்ரீதரன், திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் திரு A.பாலாஜி,கரூர் பூசிசியியல் வல்லுனர் திரு.A.சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ம்ரு.சவுமியா அவர்களும் கலந்து கொண்டணர்