ஐ.நாவின் உலக கழிப்பறை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையொன்றிலேயே உலக வங்கி இப்புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களில் 53 சதவீதத்தினர் அதாவது சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாமல் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகளளவில் 250 கோடி மக்கள் போதியளவு கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இவர்களில் 10 கோடி பேர் திறந்தவெளியில் மலசலம் கழிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஐ.நா.வினால் அனுஷ்டிக்கப்படும் முதன் முதலாவது உலக கழிப்பறை தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உலகில், 250 கோடி மக்கள், கழிப்பறை சுகாதாரம் குறித்த விஷயத்தில், அக்கறை இல்லாமல் உள்ளனர்.
110 கோடி மக்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார குறைப்பாட்டினால், ஒவ்வொரு ஆண்டும், 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
இந்த அறிவிப்பை கேட்டவுடன், ஐ.நா., உறுப்பினர்கள் சிரித்தனர்.
இது குறித்து சிங்கப்பூர் பிரதிநிதி மார்க் நியோ குறிப்பிடுகையில், ""இது நகைப்புக்கு உரிய விஷயமல்ல. கழிப்பறை சுகாதாரத்தில், சிங்கப்பூர் அதிக அக்கறை கொண்டுள்ளது. கழிப்பறை சுகாதாரம், கவுரவத்துக்குரிய விஷயமாக கருதப்பட வேண்டும்,'' என்றார்.
(பி.கு)
ஹி...ஹி...சின்ன வயசு ஆத்துல ஊசியா நூலா ஞாபகம் வருகிறது.