துறை நண்பர்களின் வேண்டுகோளின் படி அரசு ஆணைகள் மற்றும் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த வலைப் பூவில் கொடுக்கலாம் என இருக்கிறேன்.
முதலில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12618 ஊராட்சிகளில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.வருடத்திற்கு ரூ.10000/ இக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பாதுகாப்பான குடிநீர் வழங்கவும்,கிராமங்களில் சுகாதாரம் பேணவும் இத் தொகை பயன்படுத்தப்பட வேண்டும்.
Village health and water sanitation commitee,Patient welfare society, தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு ஆவணம் பிடிஎஃப் வடிவில் இங்கே.
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
23 October 2008
RNTCP
திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம்(RNTCP) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்.
தேசிய மலேரியா ஒழிப்பு மாதம்
ஜூன் 2008 தேசிய மலேரியா ஒழிப்பு மாதமாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலயத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.மலேரியா தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.டாக்டர்.சவுமியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பேரணியை சுகாதார ஆய்வாளர் திரு.வாசுதேவன் அவர்களும் கிராம சுகாதார செவிலியர்களும் முன்நின்று நடத்தினர்.
22 October 2008
பொது சுகாதாரம் தொடர்பான டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்
சமீபத்தில் ஒரு வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது. டாக்டர்.புருனோ அவர்களின் அனுபவங்கள், மற்றும் மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.நீண்ட நாட்களாக தமிழில் இத்தகைய வலை பக்கங்களைப் பார்க்க மாட்டோமா? என நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தேன்.நல்ல வரவு.உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்
டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்
டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்
17 October 2008
உணவு கலப்படத்தடுப்புத் திட்டம்
22.07.2008 அன்று சென்னை முதல் கன்யாகுமரி வரை ஒரே நாளில் பால் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையினரால் பெரிய அளவிலான ரெய்டு நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே இப்படி ஒரே நேரத்தில் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட ரெய்டு இது ஒன்றாகத் தான் இருக்கும்.
இந்த ரெய்டு தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணை இயக்குநரும் உணவு கலப்படத்தடுப்புத்திட்ட அதிகாரியுமான திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் 5.10.2008 தினமணி கதிர் இதழுக்கு இந்த ரெய்டு பற்றியும் உணவு கலப்படத்தடுப்புத் திட்டம் ப்ற்றியும் அளித்துள்ள விரிவான பேட்டி மேலே.
தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய களப்பணியாளர்கள் ரெய்டின்போது slide show வாக (சிலைடு ஷோ தெரிய flash player தேவை)
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவு.
எனக்கு ஒரு கனவு உண்டு அது நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறமையான மருத்துவர்களைக் கொண்டும், மருத்துவ வசதிகளைக் கொண்டும் 100 சதவீதம் செயல்படவேண்டும் என புதுவை ஜிப்மர் மருத்துவமணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.(16.10.2008 தினகரன் செய்தி)
உங்கள் கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா.
காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தினம் 06.05.2008

தோகமலை வட்டாரத்தில் மூன்று ஆரம்ப சுக்காதார நிலையங்கள் உள்ளன.
1. வட்டார ஆரம்ப சுகதார நிலையம் தோகமலை
2. ஆரம்பசுகாதார நிலயம் காவல்காரன்பட்டி
3. ஆரம்பசுகாதார நிலயம் சேப்ளாப்பட்டி
06.05.2008 அன்று
ஆரம்ப சுகாதார நிலைய தினம்காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்
கொண்டாடப்பட்டது .அன்றய தினம் மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து நலப்பணிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது செய்யப்பட்டு வரும் சிறப்பு சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்கள் வழஙப்பட்டன.ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மரக்கன்றுகள் நடப்பட்டன.மருத்துவ அலுவலர் திருமதி.தேன்மொழி அவர்கள் தலைமயில் நடைபெற்ற இவ் விழாவில் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர்கள் திரு.பி.முத்தையன், திரு.எஸ்.வாசுதேவன், அகியோர் செய்திருந்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டம்

படத்தில் உள்ள இச் சிறுமி கரூர் மாவட்டம் தோகமலை வட்டாரத்திற்கு உட்பட்ட அ.உடயாபட்டி கிராமம் காலனியை சேர்ந்த திரு.ராஜா /மஞ்சுளா தம்பதியரின் புதல்வி.இவர்கள் வருட வருமானம் ரூ.12000/ க்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு உட்பட்ட விவசயக்கூலிகள்.அ.உடயாப்பட்டியில் உள்ள பள்ளியில் இச்சிறுமி படித்து வரும் போது தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவால் பள்ளி சிறார் நலவாழ்வு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின்போது இவருக்கு இருதய கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.03.06.2008 ல் கரூரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாமில் இச்சிறுமிக்கு (வி.எஸ்.டி பி கிரேடு) அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சென்னை மரு.கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் ல் 27.08.2008 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது இச்சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.இதற்காக இச்சிறுமியின் குடும்பத்தார்க்கு எந்த செலவும் இல்லைமுழுக்க முழுக்க அரசே போக்குவரத்து செலவு உட்பட அனைத்தயும் செய்துள்ளது. இதே போல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு மாணவர்களின் புகப்படம்சிலைடுஷோவக இங்கே.
15 October 2008
சர்வதேச கைகள் கழுவும் தினம் 15/10/2008
15/10/2008 சர்வதேச கைகள் கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு வந்திருந்த பயனாளர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் சோப்பினால் கைகழுவுவதின் முக்கியத்துவத்துவம் பற்றியும் ,கைகழுவும் முறை பற்றியும் மருத்துவ அலுவலர் ,செவிலி, சமூக சுகாதார செவிலி,மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் எடுத்து கூறினர்.வட்டார மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,சமூக.சு.செவிலி திருமதி.நாகராணி,பகுதி சு.செவிலி திருமதி பங்கஜம்,செவிலியர் திருமதி.சாந்தி,மற்றும் கண்காணிப்பாளர் கலந்துகொண்டோம்.
07 October 2008
தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கலைக்குழு
இன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஒரு கலைக்குழு ஆ.சு.நி.க்கு வந்திருந்தது.தொழுநோய் பற்றிய பல தகவல் களை மிக யதார்தமாக ஒரே ஒரு மைக் வைத்து கொண்டு பர்வையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்து கவனிக்கச் செய்துவிடும் லாவகம் அபாரம்.கணவன் மனைவி பாத்திரஙளை ஏற்று நடித்த இருவரும் நடிக்க வில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பேசும்போது நடிப்பது போனற ஒரு நளினம்.கிட்ட தட்ட டப்பிங் கலை.உடலில் ஏற்படும் தேமல்கள் பற்றி பொது மக்களிடம் ஊள்ள அறியாமை என்ன என்பதை (எச்சிதழும்பு,அதிர்ஷ்டதழும்பு) நகைச்சுவயுடன்விளக்கியதோடு . அறிகுறி உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன, யாரை தொடர்பு கொள்ள வேண்டும், போன்ற பல தகவல்களை அற்புதமான எற்ற இறக்க வசனங்களுடன் நடித்த பாங்கு நன்றாய் யிருந்தது.நிகழ்சி ஏற்பாடுகளை திரு.டி.ஜெயராமன் என்.எம்.ஸ். அவர்கள் செய்திருந்தார்.மருத்துவ அலுவலர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சமூக சுகாதார செவிலி,கண்காணிப்பளர் ஆகியோர் ந்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)