14 November 2008

பொது சுகாதார‌த் துறை இயக்குனர்

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் திரு.டாக்டர்.இளங்கோ அவர்களை 5 முறை நேரில் நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.(நெருக்கமாக என்பதற்கு அருகில் என்பதை தவிர வேறு அர்த்தம் இல்லை.விவேக் காமெடியில் சொல்வது போல "அவரை எனக்குத்தெரியும் அவருக்கு என்னைத்தெரியாது")
முதலில் சந்தித்தது திண்டுக்கல்லில். கரூர் மாவட்டத்தில் என்னுடன் பணி புரிந்த திரு.ராமனாதன் உதவியாளர் அவர்களின் திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்த போது .அப்போது அவர் திண்டுக்கல் துணை இயக்குனர்.

இரண்டாவது, திருச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்.அப்போதய தலைமை கணக்கு அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் திரு.நாராயணன் அவர்களின் வகுப்பும் இருந்தது.அவருக்கு பவர் பாய்ண்ட் உதவிக்கு இயக்குனரக உதவியாளரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.ராஜனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன்.அப்பொது தான் திரு.ஜி.ஆர்.ரவீந்திரநாத்,நாரண்ம்மா தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வர் திரு.அறம்.,காதுகள் நாவல் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற‌ எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் பேத்தி மரு.ஏ.ஆர்.சாந்தி ,ஆகியோரை பார்த்தேன். தற்காலிக பணியாளர்களாக இருந்த போதே நிவாகம், துறை பணிகள் போன்றவைகளிள் அவர்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு ஆச்சிரியப்பட்டேன்.(இது தொடர்பாக தனி பதிவு எழுதவேண்டும்).சரி விஷயத்திற்கு வருகிறேன்,
அந்த பட்டறைக்கு ஒரு சிலைடு ஷோவுடன் துறை தொடர்பான நீண்ட வகுப்பு எடுத்தார்.அவரது பேச்சை அரங்கில் இருந்த அனைவரும் மிக அமைதியாகவும்,கவனமாகவும் வுள்வாங்கிய அந்நிகழ்வு இன்றும் என் நினைவில் உள்ளது.அவரது பேச்சாற்றலை நான் எதிர் பார்க்கவில்லை.திருநெல்வெலி துவங்கி,சமூகநீதி,மாணவர் சக்தி,என சுவாரசியமான பல விஷயங்கள் இடைஇடையே.இறுதியில் கேள்விநேரம்.சளைக்காத கேள்வி,சளைக்காத பதில்.ஒரு அதிகாரியாக பார்த்தது போய் ஒரு ஆளுமையுள்ள பேச்சாளராக அங்கு பார்த்தேன்.

3 வது சென்னையில் திரு.அரங்கஅனந்த கிருட்டிணன் அவர்களுடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் அனைவரும் அவரது அலுவலகத்தில் அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.எந்த கோரிக்க்கைகளும் இல்லாத ஒரு சாதாரண சந்திப்புதான்.வந்த அனைவருக்கும் இருக்கைகள் தந்து உட்காரச்சொன்னார்.அமைச்சுப்பணியாளர்களை உட்காரவைத்துப் பேசிய அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.கோரிக்கைகள், பணிகள்,இவைகளையெல்லாம் தாண்டி நச் சென்று அவர் சொன்ன ஒரு சங்கதி

1. உங்களது ஒவ்வொரு கூட்டத்திலும் துவங்குமுன் ஒரு மணி நேரம் உஙகளை நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இன்று நாம் வேலைக்கு வந்து எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளோம்,எத்தனை கோப்புகளை எடுத்து பணி செய்துள்ளோம். என்பது மதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.சங்கம், கோரிக்கைகள் அத்ற்கான போராட்டஙள் அனத்தும் தேவைதான்
கூடவே சுயபரிசோதனையும் தேவை.

4 வது சந்திப்பு அவர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றபின்.இயக்குனர் அறையில். சம்பிரதாய சந்திப்பு
5 வது சந்திப்பு தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் அவர்களுடன்.இயக்குனர் அறையில் அவர் எதிரே உயர்நிலை அலுவலர்கள் பலர்.இடயிடயே தம்பி சீனு (பி சி) அவசர செய்திகளை தொடர்பு கொள்ள தொலைபேசியுடன்.மிகுந்த பரபரப்பான சூழல்.அந்த சூழலிலும் கிடைத்த சிறிது நேரத்தில் கோரிக்கை படிவத்தினை கொடுத்தார் தோழர். கோரிக்கை ஒரு சிறு புத்தகம் போல இருந்தது.(அனைத்தும் அரங்க அனந்த கிருட்டிணன் அவர்கள் உழைப்பு) அப்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகள் இவர் சாதிப்பதற்காக வந்துள்ளார் என்பதை உணர்த்தியது.

உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக 3 கட்டம் போட்டு தெரிவியுங்கள்.

1.கோரிக்கை சுறுக்கமாக.
2.எங்கு நிலுவை?
3.என்ன செய்தால் தீர்வுகிட்டும்?

இவைகளுடன் முதலில் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடனான முதல் கட்ட பேச்சு நடத்துங்கள் அடுத்து
அதன் பிறகு அவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.இதற்கிடையில் தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் மற்றும் நிவாகிகள் இயக்குனர் அருகில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.இயக்குனர் சிரித்துக்கொண்டே கண்ணாடியை நாசி நுனிக்கு இறக்கி மேல் பக்கமாக பார்த்து புகைப்படம் எடுத்தவரை பர்ர்த்து கேட்டார்." என் அறையில் என்னை புகைப்படம் எடுக்க என்னிடம் அனுமதி பெறவேண்டாமா?"
தவறை உணர்ந்து உடன் மன்னிப்பு கோரினார் நண்பர்.பேசி முடித்த பிறகு விடைபெற்றோம். அப்போது தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் இயக்குனரிடம் கேட்டார் "எங்கள் மாநில நிர்வாகிகள் உங்களுடன் ஒரு புகைப்பட்ம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா அய்யா?" "ஓ.எஸ்".என்ற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாநில நிர்வாகிகள்

விளம்பரம்

ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர்,24 மணி நேரமும் மருத்துவரின் கவனிப்பு என அதிக வசதிகள் இருக்கிறது.இருந்தும் இவைகளின் இருப்பை மக்களுக்கு தெரிவிக்க விளம்பரம் தேவை யாக உள்ளது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிலவிளம்பரங்கள் இங்கே.

தடுப்பூசி பெரிய சவால்






தட்டம்மை தொடர்பான இந்த ஊடகச்செய்தி கவலை அளிக்கிறது.
போலியோவும்,பெரியம்மையும்,தமிழ்நாட்டில் இல்லாமல் செய்த பொது சுகாதாரத் துறைக்கு இது பெரிய சவால்தான்.இதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பபூசி போட தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலயதிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.ந‌டைமுறையில் இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் இருக்கும் வசதி இதில் இல்லை.பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக இருக்கும் பெண்கள் தடுப்பூசி போடும் நாட்களிள் பேருந்து பிடித்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளதோடு ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடுகிறது.அறிவுசால் நமது துறை அறிஞர்கள் இது தொடர்பாக ஆரோக்யமான விவாத பங்களிப்பை தரவேண்டிய அவசியம் உள்ளது.
மரு.புருனோ,பழனி சுரேஷ் போன்றோர் இதனை முன்னெடுக்கலாம்.

02 November 2008

மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்



பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.

29 October 2008

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள்

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாள்ர்கள் ஆகியோரது பணிகள் குறித்த அரசு ஆணைகள் கீழே.

27 October 2008

தீபாவளி வாழ்த்து



தீபாவளி திருநாளான இன்றய தினம் அனைவருக்கும் மற்றும் ஆரம்ப சுகாதார நலையங்களில் கடமை ஆற்றிவரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

26 October 2008

ஊட்டியா?, பெங்க‌ளூரா?



இப் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டன?


ஊட்டியா?, பெங்க‌ளூரா? பூங்காவா? இதெல்லாம் இல்லை
க‌ரூர் மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஒர் ஆர‌ம்ப‌சுகாதார‌ நிலைத்தில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டும் தோட்ட‌ம்.

அந்த‌ ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் காவ‌ல்கார‌ன்ப‌ட்டி

பேரரிஞர் அண்ணா பிறந்தநாள் விழா



15.09.2008 பேரரிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா அன்று உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து அவைகளது முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கர்பிணிபெண்களுக்கு வாராந்திர பரிசோதணையின் போது இலவச மதிய உணவு ,மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),திட்டம் செயல்படுத்தப்பட்டது.


தற்போது பிரசவமாகி மருத்துவமணை யிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே குழந்தைக்கான பிறப்புச் சான்று ஆரம்பசுகாதார நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிற நிகழ்வை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆன தாய்மார்களுக்கு குழந்தக்கான பிறப்புச்சான்று வழங்கப்பட்டது.

பிரசவமான ஒரு வாரத்திற்குள் ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.700 க்கான காசோலை பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.


இதே விழா காவல்காரன்பட்டி ஆரம்ப்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்றது.மரு.தேன்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவில் கர்பிணிபெண்களுக்கு வளைகாப்பு சிறப்பாக செய்யப்பட்டது. சில புகைப்படங்கள் சிலைடு ஷோவாக.

புகை தடைச்சட்டம்



பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
இது தொடர்பாக தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் களப்பணியாளர்கள் இப் பகுதியில் சிறு பிரச்சாரம் செய்தனர்.அதன் புகைப்படங்கள் சில சிலைடு ஷோவாக.

25 October 2008

அரசுஆணைகள் தொகுப்பு

106 பக்கங்கள் கொண்ட அரசு ஆணைகளின் தொகுப்பு பிடிஎஃப் வடிவில் ‍டவுன்லோடு .