18 April 2013

மென்பொருள் உதவித்துளி

நேற்று முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் 2011-12 மற்றும் 2012-13 ல் பயனடந்த பயனாளர்கள் விவரங்களை தமிழ் வானவில் அவ்வையார் எழுத்துருவில் அடிக்த்து சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார்கள்.எனக்கோ வானவில் எழுத்துரு படி டைப் அடிக்கத்தெரியாது.நான் பொனடிக் முறைப்படி என்.எச்.எம் ரைட்டர் மூலம் தமிழ் தட்டச்சு செய்யும் ஒருவிரல் கிருஷ்ணாராவ்.ஜாப்டைப்பிங்க் செய்பவர்களை அனுகியபோது டிடிபி ஃபாண்ட் களில் அடித்துத் தருகிறோம் வானவில்லில் அடிக்க முடியாது என சொல்லிவிட்டார்கள்.இயக்குனரக நண்பர் வந்தியத்தேவன் அவரகளிடம் தொடர்பு கொண்டு ஏதேனும் குறுக்கு வழி இருக்கிறதா என கேட்டேன்.அவரோ திரு.நம்பி அவர்களை இதுதொடர்பாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டபோது என்.எச்.எம் ரைட்டரில் ஆல்ட் 3 அடித்து ஓல்டு டைப்ரைட்டர் மோடில் அடிக்கும் படி கூறினார்.எனக்குத்தான் தமிழ் டைப் தெரியாதே.ஆன்லைனில் ஃபான்ட் கன்வெர்ட்டர்,டிரான்ஸ்லேட்டர் என இரண்டு மணி நேரத்தை வீணடித்தும் பலன் இல்லை.திரு.நம்பி அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டபோது என்.எச்.எம் ரைட்டர் செட்டிங்ஸ் சென்று வானவில் பொனட்டிக் தேர்ந்தெடுத்து அடியுங்கள் உங்கள் முறைப்படி அடிக்கலாம் என்றார்.அப்பாடா என்று இருந்தது.ஒருவழியாக இரவு பகலாக அடிக்கத்துவங்கி இன்று மாலை 4.00 மணிக்கு முடித்து துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பினேன்.பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி மாற்றி க்கான ஒரு வலைப்பக்கம் கணக்கிடைத்தது (திருமதி மலர் அவர்கள் உபயம்).இருப்பதிலேயே ஓரளவுக்கு தப்பில்லாமல் இந்தப்பக்கம் மட்டுமே மொழிமாற்றம் செய்கிறது.லிங்க் இங்கே http://tamil.changathi.com/.

10 April 2013

செவிலியர் குடியிருப்பு

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.







பரமசிவம் என்றொரு நடமாடும் ஆவணக்காப்பகம்

கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து 28.02.2013 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ளார் திரு.பரமசிவம் அவர்கள்.நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பல வேலைகளை எளிமையாகவும், புரியும்படியும், சொல்லிக் கொடுத்த குரு.துறை சம்மந்தப்பட்ட எந்த ஒரு ஆணை பற்றி கேட்டாலும் ”ரெடி ரெக்கனராக” பதில் சொல்லுவார்.நிதானமும்,ஒழுக்கமும் ஒருங்கே அமயப்பெற்றவர்.இவருக்கு அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடத்தப் பட்டது.


திருமதி சுதா கண்காணிப்பாளர் ஆ.சு.நி.மலைக்கோவிலூர் அவர்கள் உரை


திரு.காந்தி இ.நி.உஅ அவர்கள் வாழ்த்து


திரு.பா.சுரேஷ் கண்காணிப்பாளர் து.இ. அலுவலகம் கரூர்.அவர்கள் உரை


நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தல்





திரு.ராஜலிங்கம் கண்காணிப்பாளர். து.இ.சு.ப.கரூர் நினைவுப் பரிசு வழங்குகிறார்.



நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை.

கண்காணிப்பாளர்கள் முதுநிலைபட்டியல் 2013

2013 ஆம் வருடத்திய பொது சுகாதாரத்துறை கண்காணிப்பாளர்கள் முதுநிலைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.டவுன்லோடு செய்ய இங்கு செல்லவும்.
ஆவன உதவி திரு. கு.ராஜா

04 April 2013

பணிமாறுதல்.

02.04.2013 அன்று கரூர் மாவட்டம் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்.விருப்பத்தின் பேரில் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 02.04.2013 பி.ப பணியில் சேர்ந்துள்ளேன்.இந்த வலைப்பூவை இதே பெயரில் தொடரலாமா அல்லது இனாம் குளத்தூர் ஆ.சு.நி பெயரில் தொடரலாமா என இன்னும் முடிவு செய்யவில்லை.உங்கள் ஆலோசனைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

31 March 2013

பவானிசாகர் பயிற்சி

பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் 25 நபர்களுக்கு 26.4.2013 முதல் 24.06.2013 வரை பவானிசாகர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது.இத்துடன் பெயர்ப்பட்டியல்.-ஆவனம் உதவி திரு.கு.ராஜா










அமைச்சுப்பணியாளர் சங்கம் இயக்குனருடன் சந்திப்பு

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பாக 27.03.2013 அன்று மான்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களையும் இயக்குனர் அவர்களையும் சந்தித்துள்ளனர்.-படங்கள் உதவி திரு.கு.ராஜா.






27 March 2013

டாக்டர்.சம்பத்குமார்




நல்ல அதிகாரியாக இருப்பதும் நல்ல மனிதராக இருப்பதும் நல்ல நிர்வாகியாக இருப்பதும் அவ்வளவு எளிதல்ல .எல்லாம் ஒருங்கினைந்த ஓர் மனிதர்,தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சுகாதார மாவட்டத்தையே வழிநடத்திய ஆசான்,எனது ஆதர்ச புருஷர்.டாக்டர்.சம்பத்குமார் இந்தமாதம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒவ்வோரு ஆய்வுக் கூட்டத்திலும் இவர் கையாண்ட எளிமையான நேரடியான அனுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.யாரையும் மனம் புன்படும் படி கடிந்ததில்லை.இனி வரும் காலங்களில் இது போன்ற அதிகாரிகளை காண்பது அரிதாக இருக்கும்.போய் வாருங்கள் சார்.உங்களிடம் கற்றுக் கொண்ட பணியும்,அன்பும்,எங்களை வழிநடத்தும்.





21 March 2013

2013 பல்ஸ் போலியோ

2013 பல்ஸ் போலியோ முகாம் மற்றும் களப்பணி தொடர்பான படங்கள்













06 March 2013

மென்பொருள் உதவித்துளிகள்

முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட மென்பொருள் ஆக்கத்தில் கீழ்கண்ட பயன்பாடுகளை எளிமையாக்கினால் பயன் படுத்துபவர்களுக்கும் பணி துரிதமாக நடைபெறவும் பயனுள்ளதாக இருக்கும்.

அ)       தற்போது 9.0 மென்பொருளின் படி ஒரு செயல்முறைகளுக்கு ( proceedings) ஒரு பட்டியல் என கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு செயல்முறைக்கு ஒரு ஈசிஎஸ் மட்டுமெ ஜெனரேட் ஆகிறது.
   இதையே சற்று மாற்றி ஒரு உதாரணத்திற்கு ( proreeding 55 to 60 )  என ஈசிஎஸ் ஜெனரேட் செய்யயும் வசதியினை ஏற்படுத்தலாம்.அதற்கான செயல்முறைகள் வாரியான  பொழிப்பும் ( ABSTRACT)  கிடைக்க வழியேற்படுத்தலாம்.
இதனால் தினந்தோறும் ப்ரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்தாலும் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்காது.ஒருமுறை MTC 70  கருவூலம் சென்றால் திரும்பி வர குறைந்தது 4 நாட்களாவது ஆகும்.அதுவரை புரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்யாமல் இருக்கவேண்டியதில்லை.

ஆ) proceedings submission details entry தற்போது user friendly ஆக இல்லை.காரணம் ஒவ்வொரு proceedings க்கும் தனித்தனியாக விண்டோவருவது காலதாமதமாகிறது.அப்ளிகேஷன் ஃபார்வேர்டுச் செய்வது போல ஒரே பக்கத்தில் அனைத்து பதிவுகளும் வந்தால் எளிதாக இருக்கும். 
   பதிவு செய்யப்பட்ட proceeding பதிவுகளை ஒரு முறை பதிவு செய்து விட்டால் ஆக்டிவேட் ஆகாமல் இருப்பதில்லை.மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்யமுடிவதும் எவ்வளவு பதிவு செய்துள்ளோம் என பதிவு செய்பவர்கள் அறிவதும் சிரமமாக உள்ளது.

இ) print proceedings,ECS, ஆகிய பக்கங்களில் எத்தையாவது தவனை என்பதும் வரவழைப்பது பயனுள்ளதாக இருக்கும்.