10 October 2014

DA July 2014

DA G.O 245 dt.10.10.2014 from July 2014
அகவிலைப்படி ஜீலை 2014 முதல் அரசு ஆணை (நிதி) எண் 245 நாள் 10.10.2014
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_245_2014.pdf

09 October 2014

மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்

29.09.2014 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில்  மண்டல அளவிலான தொற்றுநோய்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. . (திருச்சி, புதுக்கோட்டை,அறந்தாங்கி, திருவாரூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர் உள்ளடக்கியது)

















07 September 2014

பல்லாண்டு வாழ்க வளமுடன்.

திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் எங்களுடன் பணிபுரியும் சகோதரன் இளநிலை உதவியாளர் திரு.மா.மகேஸ்வரன் B.Tech.MBA, அவர்களுக்கு N.சுசீலா அவர்களுடன் இன்று 07.09.2014 திருச்சியை  அடுத்த  மணச்சநல்லூர் கோபால் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

































23 August 2014

அஞ்சலி

                                                                        அஞ்சலி





பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ( இம்யூனிசேஷன்) டாக்டர் திரு.என்.அய்யனார் அவர்கள் இன்று 23.08.2014 அதிகாலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.என்ற செய்தி ஏ.பி.எம். டாக்டர் தினேஷ் அவர்கள் மூலம் குறுஞ்செய்தியாகக் கிடைக்கப் பெற்றது.டாக்டர் அய்யனார் அவர்களின் இழப்பு துறைக்கு ஈடுசெய்ய முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை பாலுமகேந்திரா கேப் என பார்த்தவுடனே கொஞ்சம் அசத்தும் தோற்றத்துக்குச் சொந்தக்காரர்.எளிமையான குடும்பத்திலிருந்து படித்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்.இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்தபோது இவருடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற நண்பர் செல்வமோகனக்குமார் கண்மருத்துவ உதவியாளர் அவர்கள் இவரது எளிமையினைப்பற்றி பிரஸ்தாபித்துக் கூறுவார்.(சைக்கிளில் இருவரும் சாப்பிட மெஸ்ஸுக்கு செல்லுவார்களாம்.)
 தருமபுரி துணை இயக்குனராக இருந்தபோது மாநிலத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஏனைய மாவட்டங்களில் இருந்து ஒரு குழுவாக மருத்துவர்களை தர்மபுரி மாவட்டத்திற்கு அனுப்பி ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு வர துறை கேட்டுக்கொண்டது.
                      தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 25.2.14 அன்று டாக்டார் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான மண்டல ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் இணை இயக்குனர் திரு.அய்யனார் அவர்கள் உரை யினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.சப்ஜக்ட் தவிர வேறு எங்கும் திசைதிரும்பாமலும் அதே நேரத்தில் பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமலும் பேசுபவர்கள் அபூர்வம்.5000 மக்கள் தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி ஒருநாளைக்கு எவ்வளவு பிக்மி எண்ட்ரி போடவேண்டியிருக்கும் என வரையறுத்துச் சொன்ன விதம் எளிதில் பிடிபட்டது.ஒரு பேராசிரியரின் நுனுக்கம் இவரது பேச்சில் இருந்தது.


நான் அவரிடம் பணிபுரிந்ததில்லை.11.4.13 நக்கீரன் பத்திரிக்கையில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் உள்ள குழப்பங்களை எழுதி துறையையும் பணியாற்றுபவர்களையும் சாடியிருந்தனர்.நான் அதற்கு ஒரு மறுப்புறையை (லிங்க்) எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன்.அதனைப்படித்த அவர் ஒரு நண்பர்மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அப்போது அவர் இம்யூனிசேஷன் இணைஇயக்குனராக இருக்கவில்லை என நினைக்கிறேன்.
நல்ல நிர்வாகியை துறை இழந்து விட்டது.
இன்று காலை செல்வமோகனக்குமார் அவர்கள் தொலைபேசியில் இச்செய்தியை கூறிவிட்டு இவ்வளவு உயர் பதவியில் இருக்கும் மருத்துவர்களே தங்கள் உடல் நலத்தை முறையாக செக்கப் செய்துகொள்ளாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது என்றார். உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

29 July 2014

மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை

ரத்தசோகை நோயை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்.19.06.2014











Nirmaladevi Superintndent Retirement 30.06.2014

Veeramachanpatty PHC, Trichy District, Smt,Nirmaladevi Superintndent Retirement 30.06.2014 Function Photos







MMU

Hospital on wheels vehicle streamed for utilisation by Thuraiyur constituency honourable MLA Tmt.P.INDIRA GANDHI MADAM after completion of infra structural modernisation works. Function was held at GPHC , VEERAMACHANPATTI,THURAIYUR BLOCK ,TRICHY DT on 12/07/2014







மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள்

மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் சான்ற்கள், மெடல்கள் பெற்றனர்.துணை இயக்குனர் டாக்டர்.ஐ.ரவீந்திரன் அவர்கள் பரிசு பெற்றவர்களை வாழ்த்தினார் ஜீலை 2014

சாவித்ரி ஸ்டெனோ(ஷாட் பூட்), மகேஸ்வரி கணக்கு உதவியாளர்(லாங்க் ஜம்ப்),கணேசன் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் (ஷாட் பூட்), ரமேஷ் உதவியாளர்( இறகுப்பந்து),அருள்பிரகாஷ் கணக்கு உதவியாளர்(இறகுப் பந்து).

ரேவதி ராஜாத்தி (வாலிபால்), ராஜயோகம் உதவி கணக்கு அலுவலர்(100 மீ ஓட்டப்பந்தயம்)

ரிலே டீம் அருள்மொழி,மஹேஸ்வரி,மீனா,பிரியா,